அட..அவன் இவன் ஜமீன்தாரின் மனைவி...90ஸ் பிரபலமா?
விஷால், ஆர்யா நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தில் ஜமீன்தாராக நடித்த ஜி.வி.குமாரின் மனைவி குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.

GM Kumar
திரைப்பட இயக்குநர் , நடிகர் என பன்முகம் காட்டி வந்தவர் ஜி. எம். குமார் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர்.
GM Kumar
இவரின் முதல் படைப்பான அறுவடை நாள் திரைப்படத்தை சிவாஜி புரொடக்சன் தயாரித்திருந்தது. இதில் பிரபு, பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
GM Kumar
நல்ல பெயரை பெற்றிருந்தாலும் தயாரிப்பளர்களை இவர் பகைத்து கொண்ட காரணத்தால் ஒரு சில படங்களை மட்டுமே இவரால் இயக்க முடிந்தது.
மேலும் செய்திகளுக்கு...silambarasan TR : நயன்தாராவை விடாமல் துரத்தும் சிம்பு... திடீர் மோதலால் பரபரக்கும் கோலிவுட்
GM Kumar
ஆரம்ப வெற்றிக்குப் பிறகு பிக்பாக்கெட்,இரும்பு பூக்கள், உருவம் என வெறும் மூன்று திரைப்படங்களை மட்டுமே இயக்கிஇருந்தார். இதில் உருவம் படத்தை இவரே தயாரித்திருந்தார். ஆனால் இந்த முடிவு குமாரை திவால் நிலைக்கு தள்ளியது.
GM Kumar
இதையடுத்து இயக்கத்தை விடுத்து நடிகராக முடிவு செய்த ஜி.எம்.குமார், பாரதிராஜாவின் கேப்டன் மகள் (1992) படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார்.
GM Kumar
சிறு சிறு வேடங்களில் தோன்றினாலும் இவருக்கு எந்த படமும் நல்வாய்ப்பை பெற்று தரவில்லை. பின்னர் ஷங்கரின் தயாரித்த வெயில் இவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
GM Kumar
அதோடுபாலா இயக்கத்தில் வெளியான அவன் இவான் படத்தில் ஹைனெஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அப்படத்தில் இவரது நடிப்பு இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது.
மேலும் செய்திகளுக்கு...Pushpa 2 : புஷ்பா 2-விலும் ஐட்டம் சாங்... சமந்தா நோ சொன்னதால் பிரபல கவர்ச்சி நடிகையை களமிறக்கும் அல்லு அர்ஜுன்
G M Kumar-pallavi
தற்போது ஜி.எம் குமாரின் மனைவி குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது. அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகை பல்லவி தானாம். 80 முதல் 90 வரை நாயகியாக ஜொலித்தவர் பல்லவி. இவர் குமார் இயக்கத்தில் வெளிவந்த அறுவடை நாள் படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தில் இயக்குனர் கி.எம் குமாருக்கும், பல்லவிக்கும் ஏற்பட்ட காதல் பின்னாளில் திருமணமாக முடிந்ததாக சொல்லப்படுகிறது.