Vignesh shivan salary: அஜித், ஏ.கே.62 படத்தில் நடிக்க ரூ. 100 கோடி கேட்க தயாரிப்பு நிறுவனம் அதிகமாக ரூ. 105 கோடி தருவதாக அவர்களே முன்வந்துள்ளனர். ஆனால், ஏகே 62 படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சம்பளம் வெறும் 50 லட்சம் மட்டும்தானாம்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24 இம்தேதி வெளியாகிய வலிமை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் திரையங்குகளில் ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறது.

படத்தின் வெற்றி:
போனிகபூர் தயாரிப்பில் உருவான வலிமை திரைப்படத்தை, நேர்கொண்ட பார்வை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் 200 கோடி மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளதாக போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

OTT-ல் ரீலிஸ்:
வலிமை OTT தளத்தின் உரிமத்தை Zee 5-கைப்பற்றி, அதன் வெளியீட்டு தேதியையும் அறிவித்திருந்தது. அதன்படி, வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
அஜித் 61 க்கு தயாராகும் அஜித்:

வலிமை வெற்றியை தொடர்ந்து, அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக ‘அஜித் 61’ படத்தில் இணைகின்றனர். ‘அஜித் 61’ படபிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த படப்பிடிப்பிற்காக அண்ணா சாலை பகுதியில், செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
விக்னேஷ் சிவன்-அஜித் கூட்டணி:
அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்து ரசிகர்களை குஷி ஆக்கியது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், உருவாகும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மையமாக கொண்டது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.

விக்னேஷ் சிவனுக்கு குறைவான சம்பளம்:
அஜித், ஏ.கே.62 படத்தில் நடிக்க ரூ. 100 கோடி கேட்க தயாரிப்பு நிறுவனம் அதிகமாக ரூ. 105 கோடி தருவதாக அவர்களே முன்வந்துள்ளனர். ஆனால், ஏகே 62 படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சம்பளம் வெறும் 50 லட்சம் மட்டும்தானாம்.
ஏனென்றால், ஏற்கனவே லைகா நிறுவனமும், விக்னேஷ் சிவனும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் எடுத்து வந்தனர். அதற்காக அட்வான்ஸ் பணம் எல்லாம் விக்னேஷ் சிவன் வாங்கினாராம்.

ஆனால், அந்த படம் ஒரு சில காரணங்களால் பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனவே தான், அப்படத்திற்கு வாங்கிய பணத்தை ஏகே 62 படத்தின் மூலம் கழித்து கொண்டு விக்னேஷ் சிவன் மீதியை பெற்றுள்ளாராம்.
