நடிகர் விஷால் தங்கையின் கணவர் மீது மோசடி புகார்; சிபிஐ அதிரடி நடவடிக்கை!
நடிகர் விஷால் தங்கை ஐஸ்வர்யாவின் கணவரும், பிரபல நகைக்கடை உரிமையாளருமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

CBI files case against Vummidi Kritish : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் தமிழில் சண்டக்கோழி, திமிரு, தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த இவர் நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் உருவானது. இப்படத்தை சுந்தர் சி இயக்கி இருந்தார். இப்படம் 2013-ம் ஆண்டு எடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், பல வருட காத்திருப்புக்கு பின் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக்குவித்தது.
CBI
மதகஜராஜா படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் விஷால். இவருக்கு வயது 40ஐ கடந்தபோதிலும் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். விஷால் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் நகை வியாபாரத்தில் சிறந்து விளங்கி வருகின்றனர். விஷாலின் தந்தை உள்பட அவரது பேமிலியில் பலரும் நகைக்கடை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விஷால் உடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர்; நடிகை அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!
Aishwarya Reddy Husband Vummidi Kritish
அந்த வகையில் நடிகர் விஷாலுக்கு ஐஸ்வர்யா என்கிற உடன்பிறந்த தங்கையும் இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. பிரபல நகைக்கடை அதிபரான உம்மிடி கிரிட்டிஸ் என்பவரை தான் ஐஸ்வர்யா திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 2019-ம் ஆண்டு திருமணம் ஆனது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த ஜோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
CBI Case against Kritish
இந்நிலையில் நடிகர் விஷால் தங்கையின் கணவரும், பிரபல நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக்கடன் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி தொழிலதிபர் கிரிட்டிஸ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ரூ. 2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இந்த விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... விஷாலின் 'மத கஜ ராஜா' தெலுங்கில் மோசமான தோல்வி!