சுஷாந்த் சிங் மரண வழக்கு; சிபிஐ அறிக்கையால் ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்!
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கையை மும்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதன் பின்னணியை பார்க்கலாம்.

Sushant Singh Rajput Suicide Case : நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020ம் ஆண்டு ஜூன் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது. தற்போது இந்த வழக்கில் ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. சுஷாந்த் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மும்பை நீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரவர்த்தியின் பெயர் அதிகம் அடிபட்டது. தற்போது அவருக்கு இந்த வழக்கில் இருந்து விடுதலையும் கிடைத்துள்ளது. ராஜசேகர் ஜாவின் அறிக்கையின்படி, சுஷாந்தின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிஐ நான்கு ஆண்டுகளாக நடத்தியது. தற்போது இந்த வழக்கை முடித்துள்ளது.
sushant singh rajput
சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கு: விசாரணை அமைப்புகள் விசாரித்து வந்த இரண்டு வழக்குகளிலும் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. ஆகஸ்ட் 2021ல் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை, ரியா அவரது குடும்பத்தினர் மற்றும் பிறருக்கு எதிராக பாட்னாவில் ஒரு வழக்கு பதிவு செய்தார். அதேபோல, செப்டம்பரில் ரியா, சுஷாந்தின் சகோதரி மற்றும் மருத்துவருக்கு எதிராக ஒரு வழக்கு பதிவு செய்தார். இந்த இரண்டு வழக்குகளிலும் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையின்படி, சுஷாந்தின் மரணத்திற்கு யாரும் காரணமில்லை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... சுஷாந்த் முதல் மதுபாலா வரை; இளம் வயதிலேயே மரணமடைந்த பாலிவுட் பிரபலங்கள் ஒரு பார்வை
sushant singh, Rhea Chakraborty
ரியா சக்ரவர்த்தியின் வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே கூறுகையில், "ரியா பல கஷ்டங்களை அனுபவித்தார். எந்த தவறும் செய்யாமல் 27 நாட்கள் சிறையில் இருந்தார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மௌனமாக இருந்துகொண்டு மனிதாபிமானமற்ற செயல்களைச் சகித்துக் கொண்டனர். ஊடகங்கள் மற்றும் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் நிரபராதிகள் துன்புறுத்தப்பட்டனர். இது எந்த வழக்கிலும் மீண்டும் நடக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன்."
நான்கு வருட விசாரணைக்குப் பிறகு சிபிஐ இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. ரியா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விடுதலை கொடுக்கப்பட்டுள்ளது. சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரமும் சிபிஐக்கு கிடைக்கவில்லை. சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020ம் ஆண்டு ஜூன் 14, அன்று பாந்த்ரா அபார்ட்மெண்டில் இறந்து கிடந்தார். அவரது பிஆர் மேலாளர் திஷா சலியானின் மரணத்திற்கு ஆறு நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்தது.
sushant singh Lover
இந்த வழக்கை முதலில் விசாரித்த மும்பை போலீசார், இது தற்கொலை வழக்கு என்று தெரிவித்தனர். ஆனால், எந்த தற்கொலை கடிதமும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனையில் தூக்கில் தொங்கியதால் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. திஷாவின் தந்தை சதீஷ் சலியான், தனது மகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். சுஷாந்த் பயந்துபோய் இருந்தார் என்றும், அவர் கொலை செய்யப்படுவார் என்று பயந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த இரண்டு மரணங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும், ஒரு பெரிய சதியின் ஒரு பகுதி என்றும் அவர் கூறியுள்ளார். தற்கொலைக்குப் பிறகு சுஷாந்தின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தற்போது இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... Adah Sharma: சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த... வீட்டில் குடியேறிய பிரபல தமிழ் பட நடிகை!