விஷால் திருமணம் செய்துகொள்ளப்போகும் நடிகை இவரா? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
நடிகர் விஷால், தன்னுடைய திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என கூறி இருந்த நிலையில், அவர் காதலிக்கும் பெண் பற்றிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

Vishal Marriage
தமிழ் திரையுலகில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு மதகஜராஜா திரைப்படம் வெளியாகி வெற்றிநடைபோட்டது. இதையடுத்து அஜய் ஞானமுத்து, கெளதம் மேனன், ரவி அரசு என பல இயக்குனர்களுடன் அடுத்தடுத்து பணியாற்றி வருகிறார் விஷால். அவருக்கு தற்போது 47 வயது ஆகிறது. ஆனால் அவர் இதுவரை திருமணமே செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
விஷால் திருமணம் எப்போது?
நடிகர் விஷால் தான் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பின்னர் தான் திருமணம் செய்துகொள்வேன் என கடந்த 2016ம் ஆண்டு அதன் அடிக்கல் நாட்டு விழாவின் போது அறிவித்தார் விஷால். 9 ஆண்டுகள் ஆகியும் அந்த கட்டிடம் இன்னும் கட்டிமுடிக்கப்படவில்லை. அதேபோல் விஷாலும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். இந்த நிலையில், நடிகர் சங்க கட்டிட பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதனை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்க திட்டமிட்டுள்ளனர். அதேபோல் தன்னுடைய திருமணமும் இந்த ஆண்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக விஷால் ஹிண்ட் கொடுத்திருந்தார்.
விஷால் காதலிக்கும் பெண் யார்?
சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் கடந்த ஒரு மாதமாக காதலித்து வருவதாக கூறிய விஷால். இந்த ஆண்டு தனது திருமணம் நடைபெறும் என்பதையும் சூசகமாக அறிவித்து இருந்தார். ஆனால் அவர் காதலிக்கு பெண் யார் என்பதை வெளியிடவில்லை. இந்நிலையில், விஷால் காதலிக்கு பெண்ணை பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. அதன்படி நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் காதலித்து வருவதாகவும், அவரையே கரம்பிடிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.
விஷாலுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியது யார் யார்?
நடிகர் விஷாலும் வரலட்சுமி சரத்குமாரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. ஆனால் கருத்து வேறுபாடால் அவர்கள் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். அதேபோல் நடிகை லட்சுமி மேனனையும் விஷால் காதலிப்பதாக பேசப்பட்டது. பின்னர் கீர்த்தி சுரேஷை விஷாலுக்காக பெண் கேட்டு சென்றதாக இயக்குனர் லிங்குசாமியே கூறி இருந்தார். அண்மையில் நாடோடிகள் பட நடிகை அபிநயாவும் விஷாலும் காதலிப்பதாக பேச்சு அடிபட்டது. பின்னர் அது வதந்தி என்பது உறுதியானது. அதேபோல் விஷால் - தன்ஷிகாவின் காதலும் உண்மையா அல்லது வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.