கூத்தாண்டவர் கோயில் திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் மயங்கி விழுந்த விஷால்!
Vishal faints at the Koothandavar Temple transgender beauty pageant : விழுப்புரம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் மேடையில் நின்ற விஷால் மயங்கி விழுந்த சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயங்கி விழுந்த விஷாலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை
Vishal faints at the Koothandavar Temple transgender beauty pageant : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். செல்லமே படத்தில் ஆரம்பித்து மத கஜ ராஜா வரையில் பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். தற்போது விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் தான் ஒவ்வொரு ஆண்டும் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதே போன்று இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா
விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த கோயிலில் பல ஊர்களிலிருந்து திருநங்கைகளை கலந்து கொண்டு சித்திரை திருவிழாவை சிறப்பாக கொண்டுவார்கள். இதில், தாலி கட்டுதல், திருநங்கைகளுக்கான அழகிப் போட்டிகளும் நடத்தப்படும். இந்த அழகிப் போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.
திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் சிறப்பு விருந்தினர் விஷால்
இந்த நிகழ்ச்சிக்கு விஷால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களைப் பற்றி சிறப்பாக பேசிவிட்டு மேடையிலிருந்து இறங்கிய போது திடீரென்று அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கீழே விழுவதற்குள்ளாக அருகிலிருந்தர்கள் அவரை தாங்கி பிடித்து காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
பொன்முடி காரில் சென்ற விஷால்
இதில் என்ன வேடிக்கை என்றால் திமுக முன்னாள் அமைச்சரான பொன்முடி தான் விஷாலை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. மேலும், விஷாலுக்கு என்ன ஆச்சு, எதனால் இந்த மயக்கம் என்பது குறித்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனால், கோடைவெயிலின் தாக்கம் காரணமாகவும், போதுமான காற்றோட்ட வசதி இல்லாத நிலையிலும் கூட விஷாலுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
மத கஜ ராஜா
இதற்கு முன்னதாக மத கஜ ராஜா படம் வெளியாவதற்கு முன்னதாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போதும் கூட விஷால் கை நடுங்கியபடி பேசினார். மேலும், உடல் எடை மெலிந்து காணப்பட்டார். அதோடு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Credits to ThanthiTV For X Page Video