ஃபாரின் சென்ற தளபதி.. விஜய் மக்கள் இயக்கத்தினருடன் புஸ்ஸி ஆனந்த நடத்தும் திடீர் மீட்டிங்! பரபரப்பாகும் பனையூர்
பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாம்.
Bussy Anand, vijay
நடிகர் விஜய் விரைவில் அரசியலில் நுழைய உள்ளதால், தன்னுடைய மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் லியோ பட ஷூட்டிங் முடிந்த கையோடு கடந்த மாதம் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூரில் ஆலோசனை மேற்கொண்ட விஜய், அதன்பின் ஓய்வுக்காக வெளிநாடு கிளம்பி சென்றுவிட்டார். தற்போது விஜய் வெளிநாட்டில் உள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.
Vijay, bussy anand
அதன்படி வருகிற ஆகஸ்ட் 5 மற்றும் 6ந் தேதி புதிதாக தொடங்கப்பட்டுள்ள விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாம். நடிகர் விஜய் வெளிநாட்டில் இருப்பதால் இந்த கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... தெறிக்கும் மாமன்னன் மீம்ஸ்! பதற்றத்தில் கப்சிப்னு ஆன மாரி செல்வராஜ்... சைலண்டாக ரியாக்ட் செய்த பகத் பாசில்
bussy anand
இதுவரை மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து அவர்களுடன் மட்டுமே ஆலோசனை நடத்தி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக வழக்கறிஞர் பிரிவினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சில முக்கிய விஷயங்கள் பற்றி விவாதிக்க புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் அறிவுறுத்தி உள்ளாராம்.
vijay
விஜய் மக்கள் இயக்கம் சட்ட ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி காலை 10 மணிக்கு பனையூரில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ்... திட்டவட்டமாக இருக்கும் தமிழக அரசு! ஜெயிலர் பட வசூலுக்கு இப்படி ஒரு சிக்கலா?