விடுதலை vs பத்து தல... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது யார்? - வெளியானது கலெக்ஷன் ரிப்போர்ட்
தமிழ் சினிமாவில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன விடுதலை மற்றும் பத்து தல படங்களின் பாக்ஸ் ஆபிஸில் வசூல் நிலவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் அவர் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் விடுதலை. சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31-ந் தேதி ரிலீஸ் ஆனது. அப்படத்துக்கு போட்டியாக ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த பத்து தல படமும் ரிலீஸ் ஆனதால் இரண்டு படங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இதில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக் குவித்து வருகிறது. குறிப்பாக முதல் நாளில் இப்படம் ரூ.12.3 கோடி வசூலித்து இருந்தது. நடிகர் சிம்புவின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை பத்து தல படைத்தது. இப்படம் 4 நாள் முடிவில் ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ரூ.50 கோடி வசூலை எட்டவும் வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... Rashmika mandanna : சமந்தா தவறவிட்ட தமிழ்படத்தை தட்டித்தூக்கிய ராஷ்மிகா - டைட்டிலுடன் வெளிவந்த அப்டேட்
மறுபுறம் இதற்கு போட்டியாக மார்ச் 31-ந் தேதி ரிலீஸ் ஆன விடுதலை படமும் நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிஸில் வளர்ச்சி கண்டு வருகிறது. முதல்நாளில் ரூ.6.5 கோடியும், இரண்டாம் நாள் ரூ.7.5 கோடியும் வசூலித்த இப்படம் மூன்று நாள் முடிவில் ரூ.23 கோடி வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படமும் முதல் வார இறுதியில் ரூ.50 கோடி வசூலை அசால்டாக கடந்துவிடும் என்பதே திரையுலகினரின் கருத்தாக உள்ளது.
மறுபுறம் விமர்சன ரீதியாக பார்த்தால் பத்து தல படத்தை விட விடுதலை படத்துக்கு அதிகளவில் பாசிடிவ் விமர்சனங்களே கிடைத்து வருவதால், இப்படத்திற்கான தியேட்டர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் விடுதலை படம் வார நாட்களிலும் அதிகளவில் கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... நயன் மகன்களின் பெயருக்கு இதுதான் அர்த்தமா! முதன்முறையாக குழந்தைகளின் முகம்தெரிய கியூட் போட்டோ வெளியிட்ட விக்கி