மகளின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய போனி கபூர்! முன்னாள் முதல்வரின் பேரனுடன் ஜான்விக்கு விரைவில் திருமணம்?
நடிப்பில் பிசியாக இருக்கும் நடிகை ஜான்வி கபூரின் காதல் பற்றி தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த தமிழ் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தற்போது தமிழில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர். இப்படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.
தந்தை பட தயாரிப்பில் பிசியாக உள்ளதைப் போல், மகள் பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மஹி என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இப்படத்தை ராஜ்குமார் ராவ் இயக்கி வருகிறார். இப்படத்திற்காக பிரத்யேகமாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.
இதையும் படியுங்கள்... வாரிசு ஆடியோ லாஞ்சில் விஜய் ரசிகர்கள் செய்த வேலையால்.. தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம் விதிப்பு..!
நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் ஜான்வி கபூரின் காதல் பற்றி தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான சுஷில்குமார் ஷிண்டேவின் பேரனான ஷிகர் பஹாரியாவை தான் ஜான்வி கபூர் தற்போது காதலித்து வருகிறாராம். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
சமீபத்தில் அனில் கபூரின் பர்த்டே பார்ட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் ஜான்வி கபூர் தனது தந்தை போனி கபூருடன் வந்து கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு ஜான்வியின் காதலனான ஷிகர் பஹாரியாவும் வந்திருந்தார். அவருடன் போனி கபூர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, அவர் மகளின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நெடுஞ்சாலையில் கையை விட்டு பைக் ஓட்டி வீடியோ வெளியிட்ட TTF வாசன் - ஆக்ஷன் எடுக்குமா காவல்துறை?