- Home
- Cinema
- டான் சக்சஸுக்கு பின் டாப் கியரில் செல்லும் சிவகார்த்திகேயன்... SK 22-வில் பிரபல பாலிவுட் நடிகையுடன் கூட்டணி
டான் சக்சஸுக்கு பின் டாப் கியரில் செல்லும் சிவகார்த்திகேயன்... SK 22-வில் பிரபல பாலிவுட் நடிகையுடன் கூட்டணி
Sivakarthikeyan : டான் படத்தின் வெற்றிக்கு பின் பிளாக்பஸ்டர் நாயகனாக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்ததாக எஸ்.கே 22 படத்தில் பிரபல பாலிவுட் நடிகையுடன் டூயட் பாட உள்ளாராம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதற்கு முன் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் படமும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான 2 படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதால், அவர் நடித்து வரும் படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
அந்த வகையில் அவர் கைவசம் அயலான், எஸ்.கே.20 ஆகிய படங்கள் உள்ளன. இதில் அயலான் படம் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது எஸ்.கே. 20 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அனுதீப் இயக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடித்து வருகிறார்.
இதுதவிர கமல் தயாரிக்கும் மாவீரன் படத்திலும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளார் சிவகார்த்திகேயன். ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
அடுத்ததாக மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தம் அடிச்சா ராக்கி பாய் ஆகிடலாம்னு நினைச்சு.. ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித்தள்ளிய சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதி