- Home
- Cinema
- தம் அடிச்சா ராக்கி பாய் ஆகிடலாம்னு நினைச்சு.. ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித்தள்ளிய சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதி
தம் அடிச்சா ராக்கி பாய் ஆகிடலாம்னு நினைச்சு.. ஒரு பாக்கெட் சிகரெட்டை ஊதித்தள்ளிய சிறுவன் ஆஸ்பத்திரியில் அனுமதி
KGF 2 Rocky Bhai : கே.ஜி.எஃப் 2 படம் பார்த்த பின் ராக்கி பாய் போல் தம் அடித்த சிறுவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரசாந்த் நீல் - யாஷ் கூட்டணியில் கடந்த மாதம் தமிழ் புத்தாண்டன்று வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. இப்படத்தில் ராக்கி பாய் எனும் மாஸான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் யாஷ் நடித்திருந்தார். இதுதவிர சஞ்சய் தத், ரவீனா டண்டன், சரண், ஈஸ்வரி ராவ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.
அதன்படி இப்படம் உலகம் முழுவதிலும் ரூ.1200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படம் வெளியாகி 1 மாதத்திற்கு மேல் ஆகியும், பல்வேறு இடங்களில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. சமீபத்தில் இப்படம் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கே.ஜி.எஃப் 2 படத்தில் ராக்கி பாயாக நடித்துள்ள யாஷ் தம் அடிப்பதை பார்த்த ஐதராபாத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், அவ்வாறு செய்தால், தானும் ராக்கி பாய் ஆகிவிடலாம் என்கிற நினைப்பில் ஒரு பாக்கெட் சிகரெட்டை தனி ஆளாக ஊதித்தள்ளி உள்ளான். இதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அந்த சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளானாம்.
சிகிச்சைக்கு பின் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய அந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடிகர்கள் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கும் போது பொறுப்புடன் நடித்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. இதனை நடிகர் யாஷ் ஏற்றுக்கொள்வாரா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... விக்ரம் வரவால் தியேட்டர்களில் இருந்து தூக்கப்படும் அபாயம்! OTT ரிலீஸ் தேதியை அறிவித்து டான் படக்குழு அதிரடி