MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூ.65 கோடிக்கு ஆடம்பர பங்களா வாங்கிய நடிகை ஜான்வி கபூர்... அந்த வீட்டில் இத்தனை வசதிகளா...!

ரூ.65 கோடிக்கு ஆடம்பர பங்களா வாங்கிய நடிகை ஜான்வி கபூர்... அந்த வீட்டில் இத்தனை வசதிகளா...!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளாராம். 

1 Min read
Author : Ganesh A
Published : Nov 09 2022, 02:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளும் ஒருவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர், சினிமாவில் தன் தாயைப் போல் சிறந்த நடிகையாக வலம் வர வேண்டும் என்கிற ஆசையுடன் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் மிலி என்கிற படம் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இவர் விரைவில் தென்னிந்திய திரையுலகிலும் எண்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க இவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதுதவிர தமிழ் படங்களில் நடிக்கவும் அவர் ஆர்வம் காட்டி வருகிறாராம், சமீபத்தில் கூட தனக்கு பிடித்த நடிகர் விஜய் சேதுபதி என கூறி இருந்தார் ஜான்வி.

இதையும் படியுங்கள்... அடிதடியில் முடிந்த பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டி... பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபருக்கு அடி உதை..!

34

இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் மும்பையில் உள்ள பந்த்ரா பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளாராம். அதன் மதிப்பு ரூ.65 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் வாங்கும் இரண்டாவது வீடு இதுவாகும். இந்த பங்களாவை தன் தந்தை போனி கபூர் மற்றும் தனது சகோதரி குஷி கபூர் ஆகியோருடன் இணைந்து வாங்கி உள்ளாராம் ஜான்வி கபூர்.

44

6 ஆயிரத்து 421 சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீட்டில் எழில்கொஞ்சும் அழகிய கார்டன் பகுதி மற்றும் பிரம்மாண்ட நீச்சல் குளமும் உள்ளதாம். இதுதவிர 5 கார்கள் வரை நிறுத்திக் கொள்ளும் அளவுக்கு சவுகரியமான கார் பார்க்கிங் வசதியும் அந்த வீட்டில் உள்ளதாம். இந்த வீட்டின் ஒப்பந்தம் கடந்த மாதமே கையெழுத்தானதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... குடும்பத்தோடு மதம் மாறிய விஜய் பட நடிகர் சாய் தீனா ..! என்ன காரணம்..?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜான்வி கபூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved