அடிதடியில் முடிந்த பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டி... பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபருக்கு அடி உதை..!
பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் பார்ட்டி அடிதடியில் முடிந்ததாக பிரபல சினிமா பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, திரிஷா, நந்தினி, விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பிரபு, ஷோபிதா, விக்ரம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசானது. வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில், தற்போது வரை திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது இப்படம்.
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கடந்த வாரம் சக்சஸ் பார்ட்டி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பொன்னியின் செல்வனில் நடித்த நட்சத்திரங்களும், அப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், இயக்குனர் மணிரத்னம், நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்... குடும்பத்தோடு மதம் மாறிய விஜய் பட நடிகர் சாய் தீனா ..! என்ன காரணம்..?
பிரபலங்கள் புடைசூழ நடந்த இந்த சக்சஸ் பார்ட்டி அடிதடியில் முடிந்ததாக பிரபல சினிமா பத்திரிகையாளர் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, இதில் கலந்துகொண்ட மணிரத்னத்தின் பெண் உதவி இயக்குனர் ஒருவரிடம் லைகா நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அந்த நபரை அடித்து உதைத்து அங்கிருந்து வெளியே துரத்திவிட்டுள்ளனர். இச்சம்பவம் அங்கு வந்திருந்து பிரபலங்களுக்கு முகசுழிப்பை ஏற்படுத்தியதாம். குறிப்பாக லைகா நிறுவன தலைவர் சுபாஸ்கரன் இந்த செய்தியை அறிந்து மிகவும் அப்செட் ஆனாராம். சக்சஸ் பார்ட்டி சண்டையில் முடிந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியதாம்.
இதையும் படியுங்கள்... முத்தம் கேட்டு டார்ச்சர் பண்ணிய ராபர்ட் மாஸ்டருக்கு தரமான பதிலடி கொடுத்த ரச்சிதா