- Home
- Cinema
- திருமணமாகி 4 வருடத்திற்கு பின் கர்ப்பமான 'பிகில்' பட நடிகை - குவியும் வாழ்த்து.. வைரலாகும் போட்டோஸ்!
திருமணமாகி 4 வருடத்திற்கு பின் கர்ப்பமான 'பிகில்' பட நடிகை - குவியும் வாழ்த்து.. வைரலாகும் போட்டோஸ்!
Reba Monica John officially Announced her Pregnancy: பிரபல நடிகை ரெபா மோனிகா ஜான், திருமணமாகி நான்கு வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார். ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரெபா மோனிகா ஜான்:
மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை துவங்கியவர் பெங்களூருவை சேர்ந்த ரெபா மோனிகா ஜான். ஆரம்ப காலங்களில் சில விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் பின்னர் மெல்ல மெல்ல சினிமா வாய்ப்புகளை பெற்று நடிப்பிலும் தடம் பதித்தார். ரெபா மோனிகா ஜான் 2016 ஆம் ஆண்டு அறிமுமான திரைப்படம் மலையாளத்தில் வெளியான Jacobinte Swargarajyam . முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக மாறிய இவர் அடுத்தடுத்து சில மலையாள படங்களில் தொடர்ந்து நடிக்க துவங்கினார்.
ஜருகண்டி:
தமிழில், நடிகர் ஜெய்க்கு ஜோடியாக 2018-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'ஜருகண்டி' படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாமல் போனது. ஹீரோயினாக தமிழில் இவர் அறிமுகமாகி இருந்தாலும், பின்னர் அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்தும் கொடுத்து நடிக்க துவங்கினார்.
சிங்க பெண் ரோல்:
அந்த வகையில், இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிய திரைப்படம் என்றால், அது 2019-ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் இரட்டை வேடங்களில் நடித்து ரிலீஸ் ஆன 'பிகில்' திரைப்படம் தான். ஃபூட் பால் விளையாட்டு வீராங்களையாக மட்டும் இல்லாமல், ஆசிட் அட்டாக்கால் பாதிக்கப்பட்ட சிங்க பெண் ரோலில் நடித்து கைதட்டல்களை பெற்றார்.
கூலி :
தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், ஆகிய மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் ரெபா மோனிகா... பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே... தன்னுடைய காதலர், ஜோமோன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ரெபா மோனிகா, கடைசியாக தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் நடித்திருந்தார்.
கர்ப்பமாக இருக்கும் ரெபா மோனிகா:
அதே போல், தளபதி விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகும் நிலையில், தற்போது கர்ப்பமாக இருக்கும் தகவலை போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.