சிங்கப்பெண்ணின் சிம்பிள் திருமணம்... காதலனை கரம்பிடித்தார் பிகில் பட நடிகை - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
காதலனை கரம்பிடித்துள்ள பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
விஜய் - அட்லீ கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான படம் பிகில். தீபாவளிக்கு ரிலீசான இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதில் விஜய் நடித்த இரண்டு வேடங்களில் மைக்கேல் கேரக்டரும் ஒன்று. அதில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருந்தார் விஜய்.
இப்படத்தில் விஜய் மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருப்பார். அவரிடம் பயிற்சி பெறும் வீராங்கனைகளாக நடிகைகள் இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான், காயத்ரி ரெட்டி, இந்திரஜா, அம்ரிதா ஐயர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த பலரும் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகின்றனர். ஒருசிலர் ரியாலிட்டி ஷோக்களில் அசத்தி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... மஹாலட்சுமி - ரவீந்தர் வீட்டில் களைகட்டிய விசேஷம்..! மாலையும் கழுத்துமாக போஸ் கொடுத்த புதுமண தம்பதி..!
அந்த வகையில் பிகில் படம் மூலம் பேமஸ் ஆன நடிகை காயத்ரி ரெட்டி, கடந்தாண்டு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்கிற ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு அசத்தினார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களின் மனம்கவர்ந்த போட்டியாளராகவும் காயத்ரி இருந்தார். படங்களிலும் நடித்து வரும் இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நிச்சயமானது.
அப்போது சர்ப்ரைஸாக நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காயத்ரி, தற்போது திருமணத்தையும் சிம்பிளாக செய்துள்ளார். அதிகாரப்பூர்வமாக எனது கணவரை அறிமுகம் செய்கிறேன் என குறிப்பிட்டு, திருமண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். காதலனை கரம்பிடித்துள்ள பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... அரசியல்வாதியாக கெத்து காட்டும் சிரஞ்சீவி... நயன்தாராவின் மிரட்டல் நடிப்பில் வெளியானது 'காட் ஃபாதர்' ட்ரைலர்.