- Home
- Cinema
- BiggBoss Ultimate :பிக்பாஸ் அல்டிமேட் பைனலுக்குள் நுழைந்த 3 பேர்! டைட்டிலை தட்டித் தூக்கப்போவது யார் தெரியுமா?
BiggBoss Ultimate :பிக்பாஸ் அல்டிமேட் பைனலுக்குள் நுழைந்த 3 பேர்! டைட்டிலை தட்டித் தூக்கப்போவது யார் தெரியுமா?
BiggBoss Ultimate : விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது குறித்த தகவல் லீக் ஆகி உள்ளது.

தமிழ் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது ஓடிடிக்கென பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் என்கிற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 70 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் இந்நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகிய 4 போட்டியாளர்கள் இருந்தனர்.
அவர்களில் ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகிய 3 பேர் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, இம்முறையும் பைனல்ஸ் செல்லும் வாய்ப்பை நழுவவிட்டுள்ளார் தாமரைச் செல்வி. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல்ஸில் முன்னாள் போட்டியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஏற்கனவே பிரியங்கா, பாவனி, முகென் ராவ் ஆகியோர் சில தினங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில், அடுத்ததாக கடந்த சீசன் டைட்டில் வின்னர் ராஜு, இரண்டாவது சீசன் டைட்டில் வின்னர் ரித்விகா ஆகியோரும் இந்நிகழ்ச்சியின் பைனல்ஸில் கலந்துகொண்டுள்ளார்களாம். இதுதவிர நடிகை யாஷிகா ஸ்பெஷல் டான்ஸ் பர்பார்மன்ஸ் ஒன்றை கொடுத்துள்ளாராம்.
இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டிலை வெல்லப்போவது யார் என்பது குறித்த தகவல் லீக் ஆகி உள்ளது. அதன்படி பாலாவுக்கு பிக்பாஸ் டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 4-வது சீசனில் இறுதிவரை வந்த பாலாவுக்கு 2-ம் இடம் கிடைத்த நிலையில், தற்போது பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என்கிற அவரது கனவு இதன் மூலம் நனவாக உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... தலைவர் 169 படம் கைநழுவியதால் ரூட்டை மாற்றிய கார்த்திக் சுப்புராஜ்... புது கூட்டணியில் தயாராகிறது ஜிகர்தண்டா 2