பிக்பாஸ் ஜிபி முத்துவை சரமாரியாக பிளேடில் வெட்டிய சகோதரர்! 175 தையல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஜிபி முத்து தனக்கு, 175 தையல் போடப்பட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னர், நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட டிக் டாக் பிரபலமாக இருந்தவர் ஜிபி முத்து. சர்ச்சைக்குரிய பல வீடியோக்களை வெளியிட்டதால் இவரை கைது செய்ய வேண்டும் என்றும், இவருடைய வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள் பலர் உள்ளனர்.
ஆனால் இதையெல்லாம் கடந்து தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய எதார்த்தமான அணுகுமுறையால், வெள்ளந்தி பேச்சாலும் ரசிகர்களை தன்வசமாக்கியுள்ளார் ஜிபி முத்து.
ஒருவேளை ஜிபி முத்து 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்திருந்தால்... இவர்தான் வெற்றியாளர் என ரசிகர்கள் ஆர்ப்பரித்த நிலையில், தன்னுடைய குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததாலும், அவர் மீதுள்ள அன்பாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு இரண்டாவது வாரத்திலேயே வெளியேறுவதாக அறிவித்தார்.
ஜிபி முத்துவின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தாலும், பின்னர் அவர் தன்னுடைய பிள்ளைகள் மேல் உள்ள பாசத்தால் காசு பணம் எதையும் பார்க்காமல் வெளியே செல்ல செல்வதாக அறிவித்தது இவர் மீது வைத்திருந்த மரியாதையை அதிகரிக்க செய்தது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன், பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருவதோடு, சில ஊடகங்களிலும் தொடர்ந்து பேட்டி கொடுத்து வரும் ஜிபி முத்து, சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய சகோதரருக்கும் தனக்கும் வேலை செய்யும் இடத்தில் சண்ட ஏற்பட்ட போது அவர் கோபத்தில் கையில் கிடைத்த பிளேடை வைத்து சரமாரியாக உடலில் கிழித்து விட்டார்.
இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த என்னை நண்பர்கள் தான் மருத்துவமனையில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தனர். அவர் பிளேடால் கிழிந்ததில் தனக்கு 175 தையல் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னை பிளேடால் தாக்கிய சகோதரர் தற்போது உயிரோடு இல்லை என்றும், அவர் தன்னை பிளேடால் கிழிந்த வலியை விட... அவர் உயிரோடு இல்லை என்கிற வலி தான் அதிகமாக உள்ளதாகவும், தன்னுடைய சகோதரரின் பிள்ளைகளையும் ஜிபி முத்து தான் வளர்த்து வருவதாக கூறியுள்ளார்.