37 வயதில் 'சந்திரலேகா' சீரியல் நடிகைக்கு ஜோடி கிடைச்சாச்சு.! வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வேதா!
'சந்திரலேகா' சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஸ்வேதா பன்டேக்கர், தன்னுடைய இதயத்தை கண்டு பிடித்து விட்டதாக கூறி, வருங்கால கணவருடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.
அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான 'ஆழ்வார்' படத்தில்... அஜித்தின் தங்கையாக நடித்தவர் ஸ்வேதா. இதை தொடர்ந்து 'வள்ளுவனும் வாசுகியும்', 'பூவா தலையா', மீரா உடன் கிருஷ்ணன்', 'நான்தான் பாலா' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
கடைசியாக இவர் கடந்த 2015 ஆண்டு வெளியான பூலோகம் படத்தில் முக்கிய கதாபாத்திரரத்தில் நடித்திருந்த நிலையில், அதன் பின்னர், எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால், சீரியலின் பக்கம் திரும்பினார்.
சன் டிவியில் ஒளிபரப்பான மகள் சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்த, ஸ்வேதா... இவர் இந்த சீரியலை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடிக்க துவங்கிய சந்திரலேகா சீரியல் சுமார் 8 வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், சமீபத்தில் தான் முடிவடைந்தது. ஒரே சீரியலில் 8 வருடம் தொடர்ந்து நடித்ததன் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் இருந்து வருகிறது.
சீரியல் ஹீரோயினாக மட்டும் இன்றி நிலா, ரோஜா, மகராசி, அன்பே வா, போன்ற சீரியலில் கெஸ்ட் ரோலிங் நடித்துள்ளார். அதேபோல் ரியாலிட்டி ஷோக்கலான ஸ்டார் வார்ஸ், பூவா தலையா, மாத்தி யோசி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.
இவர் நடித்து வந்த சந்திரலேகா சீரியல் முடிவடைந்து, சில மாதங்களே ஆகும் நிலையில்... தற்போது தன்னுடைய 37 வயதில், வருங்கால கணவரை கண்டு பிடித்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு விரைவில் திருமணம் நடைபெற உள்ள தகவலை உறுதி செய்துள்ளார். இதை தொடர்ந்து இவரது ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.