காதலர் தினத்தன்று காதலனை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் ஆயிஷா - இரவில் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வைரல்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை ஆயிஷா, காதலர் தினத்தன்று தனது காதலனை அறிமுகப்படுத்தி அவருடன் எடுத்த ரொமாண்டிக் போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆயிஷா. குறிப்பாக இவர் நடித்த சத்யா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஆயிஷா, ஆரம்பத்தில் சண்டைக்கோழியாக வலம் வந்தாலும், போகப்போக ரசிகர்களின் மனம்கவர்ந்த போட்டியாளராக மாறினார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே தனது காதலன் பற்றி பல இடங்களில் பேசி இருந்தார் ஆயிஷா. குறிப்பாக அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகி செல்லும்போது கூட சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடு என ஷிவின் சொல்லி அனுப்பினார். உடனே பலரும் எழுப்பிய கேள்வி யார் ஆயிஷாவின் காதலர் என்பதுதான். ஆயிஷாவும் அதனை வெளியிடாமல் சீக்ரெட்டாகவே வைத்திருந்தார்.
இதையும் படியுங்கள்... காதலர் தின ஸ்பெஷல்.. ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சினேகா, காஜல் ஆகிய பல பிரபலங்கள் வெளியிட்ட கியூட் போட்டோஸ்!
கடந்த வாரம் கூட முதன்முறையாக காதலனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆயிஷா, அவரது முகத்தை மட்டும் காட்டாமல் இருந்து வந்தார். இறுதியில் அவர் காதலர் தினத்திற்காக தான் காத்திருப்பதாக அனைவரும் கூறி வந்த நிலையில், காதலர் தினமான நேற்று, தனது காதலனை ஒருவழியாக அறிமுகப்படுத்தினார் ஆயிஷா. அதன்படி அவர் யோகேஷ் என்பவரை தான் காதலித்து வருவதாகவும் அறிவித்துள்ளார்.
யோகேஷ் உடன் எடுத்த இரண்டு ரொமாண்டிக் புகைப்படங்களை பதிவிட்டு இது தனக்கு மிகவும் சந்தோஷமான காதலர் தினம் என பதிவிட்டு இருந்தார் ஆயிஷா. அதுமட்டுமின்றி நேற்று இரவு இருவரும் ஒன்றாக டேட்டிங்கும் சென்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்களையும் ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் ஆயிஷா. காதலனை அறிமுகப்படுத்திய ஆயிஷாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
அதுமட்டுமின்றி இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்டில் எப்போ கல்யாணம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ இது விஷ்ணு இல்லையா என கேட்டு வருகின்றனர். ஏனெனில் சத்யா சீரியலில் ஆயிஷாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் விஷ்ணு. அவரும் ஆயிஷாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வெளியானதால் இதுபோன்ற கமெண்ட்டுகள் அதிகளவில் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... என் மகாலக்ஷ்மியோட காதல் அவ்வளவு உண்மையான காதல்! கவிதையால் உருகிய ரவீந்தர்.. வைரலாகும் பதிவு!