Losliya : மெல்லிய இடையை இறுக்கி பிடித்திருக்கும் சேலையில்... பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் லாஸ்லியா
Losliya : வெள்ளை நிற மெல்லிய சேலையும், ஸ்லீவ்லெஸ் பிளவுஸும் அணிந்தபடி நடிகை லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்ட லாஸ்லியா, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை லாஸ்லியாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி அவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
நடிகை லாஸ்லியா நடிப்பில் முதலாவதாக வெளியான திரைப்படம் ப்ரெண்ட்ஷிப். இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார் லாஸ்லியா. கடந்தாண்டு வெளியான இப்படம் ஃபிளாப் ஆனது.
முதல் படம் தோல்வி அடைந்தால், தான் நடிக்கும் அடுத்த படமான கூகுள் குட்டப்பா படத்தை பெரிதும் நம்பி உள்ளார் நடிகை லாஸ்லியா.
கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா. இப்படத்தை சபரி சரவணன் இயக்கி உள்ளனர்.
இது ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
சமீபத்தில் கூகிள் குட்டப்பா படத்தின் டிரெய்லர் ரிலீசாகி வரவேற்பை பெற்றது. அதன் ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை லாஸ்லியாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
வெள்ளை நிற மெல்லிய சேலையும், ஸ்லீவ்லெஸ் பிளவுஸும் அணிந்தபடி நடிகை லாஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... Actor vishal : பிச்சை எடுத்தாவது நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்போம் - நடிகர் விஷால் பேச்சு