- Home
- Cinema
- Abhinay : விவாகரத்து குறித்து பதிவிட்டு சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் அபிநய் மனைவி - குழப்பத்தில் ரசிகர்கள்
Abhinay : விவாகரத்து குறித்து பதிவிட்டு சர்ச்சையை கிளப்பிய பிக்பாஸ் அபிநய் மனைவி - குழப்பத்தில் ரசிகர்கள்
BiggBoss Abhinay : அபிநய்யின் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து குறித்து பதிவிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

சர்ச்சைகளுக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாதது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். அதேபோல் அண்மையில் நடத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் என்கிற ஓடிடிக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதுண்டு, அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான அபிநய், பாவனி உடன் காதல் சர்ச்சையில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டார்.
அந்நிகழ்ச்சியில் இருந்து அவர் எலிமினேட் ஆகி வெளியே வந்தபோது, அவரது மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அபிநய்யின் பெயரை நீக்கினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக பேச்சு அடிபட்டது. பின்னர் பிறந்தநாள் பார்ட்டியில் இருவரும் ஜோடியாக போஸ் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்நிலையில், அபிநய்யின் மனைவி அபர்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவாகரத்து குறித்து பதிவிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதன்படி, விவாகரத்து ஆகும் போது பெண்களுக்கும் ஜீவனாம்சம் தரும் நிலை வர வேண்டும் என தெரிவித்துள்ள அவர். அதுதான் உண்மையான gender equality எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், இப்படி ஒரு பதிவு தேவையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... Nayanthara : நள்ளிரவில் காதலனுடன் திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த நயன்தாரா... என்ன விஷயம் தெரியுமா?