சிங்கம் போன்ற கர்ஜனையோடு பிக்பாஸுக்கே குரல் கொடுப்பது யார் தெரியுமா?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸுக்கே குரல் கொடுத்து போட்டியாளர்களை வழிநடத்தும் பிரபலம் யார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
Bigg Boss Show Concept:
ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தான், தமிழில் இந்த நிகழ்ச்சி துவங்க, பிள்ளையார் சுழி போட்டது. சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 18 சீசன்களை எட்டியுள்ளது. குறிப்பாக இந்த முறை பிரபல தமிழ் நடிகை, ஸ்ருதிகா கலந்து கொண்டு விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் ஸ்ருதிகா நடிப்பதாகவே ஹிந்தியில் உள்ள பிக்பாஸ் ரசிகர்கள் நினைத்தாலும், இப்போது அவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.
Bigg Boss Tamil first Season Controversy
மேலும் தமிழில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். முதல் சீசனிலேயே ஓவியா மற்றும் ஆரவ்வின் காதல், காயத்திரி ரகுராமின் அத்து மீறிய பேச்சு ஆகியவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலர் குழந்தைகள் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படியெல்லாம் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என கூறினர். இது போன்ற பிரச்சனைகளை தன்னுடைய வார்த்தை ஜாலங்கள் மூலமே சமாளித்த கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.
கிருஸ்துமஸ் பண்டியைகை முன்னிட்டு வெளியாகும் 'சூர்யா 44' திரைப்படத்தின் அப்டேட்!
Bigg Boss Edited Controversy Things
மேலும் சர்ச்சைக்கு வித்திட்ட சில விஷயங்களை கூர்ந்து கவனித்த பிக்பாஸ் கடந்த இரண்டு சீசன்களாக, இது போன்ற விஷயங்களை கத்தரி போட்ட பின்னரே வெளியிடுகிறார். குறிப்பாக ஸ்மோக்கிங் ஏரியா பக்கம் மட்டும் கேமரா செல்வதே இல்லை. ஆனால் ஒரு சில பிரபலங்கள் தங்களின் வாயை விட்டு சிக்கி கொள்கிறார்கள்.
Kamalhaasan Quit Bigg Boss Tamil
கடந்த 7 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தாலும், 8-ஆவது சீசனில் தன்னுடைய பர்சனல் காரணங்கள் காரணமாக விலகுவதாக அறிவித்தார். குறிப்பாக கமல் விலகளுக்கு காரணம், ஏஐ தொழில்நுட்பம் குறித்து அவர் படிக்க அமேரிக்கா சென்றது என கூறப்பட்டது. கமல் பிக்பாசில் இருந்து விலகியதால், தற்போது இந்த நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
தேசிய விருது யாருக்கு? 2024-ல் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய 4 நடிகர்கள்!
Vijay Sethupathy Host Bigg Boss 8
ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது, மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்களை வறுத்தெடுப்பது மிகவும், சுவாரஸ்யமாகவே இருந்தாலும் போட்டியாளர்களுக்கு பேச அனுமதிக்கவில்லை என்பதே ரசிகர்களின் வருத்தம். தற்போது 75 நாட்களை பிக்பாஸ் எட்டியுள்ள நிலையில், இன்னும் சில தினங்களில் பிக்பாஸ் முடிவுக்கு வர உள்ளது.
Bigg Boss Voice Artist Sasho
இது ஒருபுறம் இருக்க, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்து வரும் பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சிங்கம் போன்ற கர்ஜனை குரலால் ரசிகர்களை ஆட்டி படைத்தது வரும் அவரின் உண்மையான பெயர் சாஷூ சதிஸ் சாரதி தான் சொந்தக்காரர். இவர் விஜய் டிவியில் தான் பணியாற்றி வருகிறார். ஏராளமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுத்து வருவது மட்டும் இன்றி சில நடிகர்களுக்கும் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.