MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "பேசியே எல்லாரையும் ஓடவிட போறாப்ல" பிக் பாஸ் சீசன் 8 - களமிறங்குகிறாரா அந்த மாஸ் நடிகர்?

"பேசியே எல்லாரையும் ஓடவிட போறாப்ல" பிக் பாஸ் சீசன் 8 - களமிறங்குகிறாரா அந்த மாஸ் நடிகர்?

Bigg Boss Season 8 : விரைவில் துவங்க இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசனில், இரண்டு முக்கியமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

2 Min read
Author : Ansgar R
Published : Sep 07 2024, 11:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kamalhaasan

Kamalhaasan

ஏற்கனவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏழு சீசன்களாக புகழ் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். சின்னத்திரை வரலாற்றில் தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற வெகு சில நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. கடந்த ஏழு சீசங்களாக இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் இந்த முறை அவர் அமெரிக்காவில் சில தொழில் முறை பயிற்சிகளை மேற்கொள்ளவும், குறிப்பிட்ட சில கலைகள் குறித்து படிக்கவும் சென்றுள்ள நிலையில் அவரால் இந்த சீசனை தொகுத்து வழங்க முடியாமல் போனது.

பறிபோன பல உயிர்கள்.. இயக்குனர் பாலச்சந்தரை முடக்கிய கண்ணதாசனின் அந்த ஒரு பாடல்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Bigg Boss Season 8

Bigg Boss Season 8

இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த எட்டாவது சீசனை, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே அதற்கான பணிகள் துவங்கியுள்ள நிலையில், அண்மையில் இந்த பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் பிரமோஷன் வீடியோவிற்கான ஷூட்டிங்கும் நடந்து முடிந்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பிரபலங்கள் குறித்து அறிவிப்புகள் வெளிவரவில்லை என்றாலும் இணையத்தில் பல வகையான யுகங்கள் எழுந்து வருகின்றது. இந்நிலையில் குறிப்பிட்ட இரு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

34
Madhampatty Rangaraj

Madhampatty Rangaraj

அதில் முதலாவதாக அண்மையில் சமையல் கலைஞராக அசத்தி வரும் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் இந்த நிகழ்ச்சியில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கூக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இப்போது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் ரங்கராஜ், ஏற்கனவே "மெஹந்தி சர்க்கஸ்" மற்றும் "பென்குயின்" ஆகிய இரு திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

44
R Parthiban

R Parthiban

அதேபோல தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், விநியோகஸ்தராகவும் அசத்தி வரும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. கவிதை நடையிலேயே பிக் பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்சை புரட்டிப் போடப் போகிறார் பார்த்திபன் என்று இப்போதே இணையத்தில் மீம்ஸ்கள் வைரலாக தொடங்கியுள்ளது. தான் இயக்கிய முதல் திரைப்படத்திற்காகவே தேசிய விருது வென்ற வெகு சில இயக்குனர்களில் நடிகர் பார்த்திபனும் ஒருவர் ஆவார்.

இதனால் தான் அவர் "ஆண்டவர்".. 69 வயதிலும் அமெரிக்காவிற்கு படிக்கச்சென்ற கமல் - பரபரப்பு தகவல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Drishyam 3 : கருப்பு சூர்யாவை விடுங்க.. பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட வரும் ஜார்ஜ்குட்டி.. டிக்கெட் புக்கிங் ஆரம்பம்
Recommended image2
Now Playing
அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Recommended image3
Actress with Chief Ministers: அண்ணா முதல் விஜய் வரை.. 6 + 1 முதல்வர்களுடன் நெருங்கி பழகிய ஒரே நடிகை யார்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved