இதனால் தான் அவர் "ஆண்டவர்".. 69 வயதிலும் அமெரிக்காவிற்கு படிக்கச்சென்ற கமல் - பரபரப்பு தகவல்!
Kamal Haasan : உலக நாயகன் கமல்ஹாசன் வெளிநாட்டுக்கு படிக்கச் சென்றிருப்பதாக ஒரு தகவல் இப்பொது வைரலாக பரவி வருகின்றது.
சிறுவயது முதல் திரைத்துறையில் பயணித்து வரும் நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அதில் உலக நாயகன் போல பல கலைகளில் சிறந்து விளங்குபவர்கள் சிலரே. தன்னுடைய வாழ்க்கையில் சினிமாவை தவிர வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தவர் கமல். கடந்த சில காலமாக அவர் அரசியலில் பயணித்தாலும், அவர் பெரிதும் நேசிப்பது தனது சினிமாவை மட்டுமே. சரி அப்படி என்ன அவர் சினிமாவில் சாதித்துவிட்டார் என்று கேட்டால், அவர் என்ன சாதிக்கவில்லை என்று முதலில் சொல்லுங்கள் என்பதே அவரது ரசிகர்களின் பதிலாக இருக்கும்.
கடந்த 2010ம் ஆண்டு கமல் 50 என்ற நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது, அதில் பல திரையுலகில் இருந்து பெரும் கலைஞர்கள் கலந்துகொண்டனர். அப்போது கமலை வாழ்த்தி பேச துவங்கிய ரஜினிகாந்தின்.. "எனது கலையுலக அண்ணா கமல் அவர்களுக்கு வணக்கம்.. நான் கலைத்தாயிடன் ஒரு விஷயத்தை பற்றி கேட்டேன். நாங்களும் (மம்மூட்டி, மோகன்லால், வெங்கடேஷ், அமிதாப் பச்சன்) நடிகர் கமலை போல நன்றாக நடிக்கிறோம், நன்றாக பாடுபடுகிறோம், ஆனால் எங்களை எல்லாம் கரம்பிடித்து அழைத்து செல்லும் நீங்கள், கமலை மட்டும் ஏன் உங்கள் நெஞ்சோடு அணைத்து வைத்துள்ளீர்கள் கலை தாயே இது நியாயமா என்று கேட்டேன்?"
"தளபதி ஸ்டைலில் ஒரு போஸ்" வெளியானது சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் அப்டேட் - என்ன அது?
"அதற்கு எனக்கு பதில் அளித்த கலைத்தாய், ரஜினி... நீ நடிகனாக மாறவேண்டும் என்று இந்த ஜென்மத்தில் தான் ஆசைப்பட்டாய். ஆனால் கமல் பல ஜென்மங்களாக இந்த வரத்தை கேட்டு வருகின்றார். இரு ஜென்மத்தில் தயாரிப்பாளராக, ஒரு ஜென்மத்தில் விநியோகஸ்தராக, ஒரு ஜென்மத்தில் பாடகராக, ஒரு ஜென்மத்தில் இயக்குனராக என்று பல உருவங்கள் கொண்ட அவரை நான் எப்படி கீழே விடமுடியும் என்று எனக்கு கலைத்தாய் பதில் அளித்தார். அப்போது, இல்லை தாயே அவர் உன்னோடு அங்கேயே இருக்கட்டும் என்று கூறினேன்" என்று கண்கலங்கி கமலை பாராட்டினார்.
திரைத்துறையை பொறுத்தவரை முதல் டிஜிட்டல் படம், மென்பொருளை கணினி வழியாக திரைப்படத்தில் பயன்படுத்தியது. முழு நீள மௌன திரைப்படம், லைவ் ஆடியோ Recording, CD வடிவில் படங்களை பதிவு செய்வது, மல்டி கேரக்டர் எடிட்டிங், ஆஸ்காருக்கு அதிகம் பரிந்துரைக்கப்பட்ட படங்கள் என்று கமல் செய்த சாதனைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அதில் ஒரு பகுதியாக இப்பொது 3 மாத கோர்ஸ் ஒன்றை பயில அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக கூறப்படுகிறது. படங்களில் பயன்படும் AI தொழில்நுடம் பற்றிய படிப்பை பயில அவர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
சர்ச்சையை விலைக்கு வாங்கிய டாப் ஹீரோக்களின் 5 பாடல்கள்!