MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சர்ச்சையை விலைக்கு வாங்கிய டாப் ஹீரோக்களின் 5 பாடல்கள்!

சர்ச்சையை விலைக்கு வாங்கிய டாப் ஹீரோக்களின் 5 பாடல்கள்!

தமிழ் சினிமாவில் வெளியாகி, ஒரு சில சர்ச்சைகளுக்கு ஆளான ஐந்து படங்களில் இடம்பெற்ற பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

3 Min read
Author : manimegalai a
Published : Sep 07 2024, 07:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Karnan

Karnan

கர்ணன்:

இயக்குனர் மாரி செல்வராஜ், 'பரியேறும் பெருமாள்' படத்தின் வெற்றிக்கு பின்னர்... நடிகர் தனுஷை வைத்து இயக்கிய திரைப்படம் கர்ணன். கலைப்புலி தாணு தயாரித்திருந்த இந்த படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, லால், நடிகர் நட்டி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பொடியன் குளம் பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து , எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தையும்,  இயக்குனர் மாறி செல்வராஜ் வழக்கம்போல தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் படமாகவே இயக்கி இருந்தார். ஒரு தரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும்.. மற்றொரு தரப்பினர் இப்படத்தை வரவேற்றனர்.

இப்படத்தில் இடம்பெற்ற 'பண்டாரதி புராணம்' என்கிற பாடல் குறிப்பிட்ட சாதியை குறிப்பிடுவது போல் இருப்பதாக கூறி... அந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் போர்க்கொடி தூக்கிய நிலையில், பின்னர் அந்த வார்த்தையை பாடலில் இருந்து தூக்கி விட்டு 'மஞ்சனத்தி புராணம்' என்கிற வார்த்தையோடு இந்த பாடல் வெளியானது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Pichaikaran

Pichaikaran

பிச்சைக்காரன்:

இயக்குனர் சசி இயக்கத்தில், விஜய் ஆண்டனி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்த திரைப்படம் பிச்சைக்காரன். சட்னா டைட்டஸ் ஹீரோயினாக நடித்திருந்த இந்த படத்தில், பகவதி பெருமாள், தீபா ராமானுஜம், மோகன் ராமன், உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், இடம்பெற்ற கிளாமர் என்கிற பாடலில்... "கோட்டாவில் சீட்டு வாங்கி டாக்டர் ஆகுறான். தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்"என்கிற வரிகள் இடம் பெற்றது. இந்த வரிகள் மருத்துவத்துறையை சாடி, தவறாக சித்தரிக்கும் விதத்தில் இருப்பதாக கூறி மருத்துவர்கள் பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த பாடல் குறித்து மருத்துவ சங்கம் விசாரிக்க வேண்டும் என சிலர் புகார் கொடுத்ததை தொடர்ந்து, இந்த குறிப்பிட்ட வார்த்தைகளை படக்குழு நீக்கியது. இதன் பின்னர் விஜய் ஆண்டனி இது வேண்டும் என்றோ... யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்திலோ வைக்கப்பட்ட வரிகள் அல்ல என கூறி விளக்கம் அளித்தார்.

டாப் நடிகரின் படத்தில் ஆசையாக நடித்து மோசம் போன நக்மா! கவர்ச்சி நடிகையால் ஃபீல்ட் அவுட் ஆன சோகம்!

 

35
Uthama Villan

Uthama Villan

உத்தம வில்லன்:

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள் மத உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் இருந்ததாக கூறியது மிகப் பெரிய சர்ச்சைக்கு வழிவகுத்தது. கமலஹாசன் படங்கள் என்றாலே, சர்ச்சைகள் என்பது புதிதல்ல. கமல் நடித்த இந்த படத்தில், கே. பாலச்சந்தர், கே விஸ்வநாத், ஊர்வசி, ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி திருவோத்து, நாசர், உள்ளிட்ட பபலர் நடித்திருந்தனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு உருவான இப்படம், வசூல் ரீதியாக 100 கோடியை எட்டிய போதிலும்... மிகப்பெரிய தோல்வி படமாகவே பார்க்கப்பட்டது.

மேலும் ஹிந்து பரிஷத் என்ற மத அமைப்பினர், பிரஹலாத் மற்றும் ஹிரண்யகசிபு இடையேயான உரையாடலைப் பற்றிய இரணியன் நாடகம் பாடலில் உள்ள வரிகள் மக்களின் மத உணர்வுகளை புண் படுத்துவதாக தெரிவித்தனர். இதில் இடம்பெற்ற வரிகள் விஷ்ணுவை பின்பற்றுபவர்களை நோகடிப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட காட்சி நீக்கப்பட்டது.
 

45
Vaanam

Vaanam

வானம்:

நடிகர் சிம்பு நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வானம். இப்படம் தெலுங்கில் வெளியான வேதம் என்கிற படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியானது. இந்த படத்தில் சிம்பு, பரத், பிரகாஷ்ராஜ், அனுஷ்கா செட்டி, சந்தானம், சோனியா அகர்வால், சரண்யா பொன்வண்ணன், போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 5 பேரின் கதை ஒரே இடத்தில் எப்படி இணைகிறது என்பது தான் இப்படத்தின் கதைக்களம். காதல், காமெடி, எமோஷன், என அனைத்தும் கலந்த ஒரு ஜெனரஞ்சகமான கதைக்களத்தில் இப்படம் உருவானது. 

இந்த படத்தில் நடிகர் சிம்பு, யுவன் ஷங்கர் ராஜா இசையில்... 'எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்' என்கிற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் மூலம் சிம்பு பெண்கள் மீது உள்ள வெறுப்பை வெளிப்படுத்துவது போல் இருப்பதாக கூறி மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள் போர்க்கொடி தூக்கினர். பின்னர் இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட பின்னர், இந்த பிரச்சனை கட்டுக்குள் வந்தது.

அஜித்துக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடலை காப்பியடித்த தேவா! சூப்பர்.. டூப்பர் ஹிட் அடித்த ரொமான்டிக் சாங் எது தெரியுமா
 

55
Manmadhan Ambu

Manmadhan Ambu

மன்மதன் அம்பு:

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன், திரைக்கதை எழுதி நடித்திருந்த திரைப்படம் மன்மதன் அம்பு. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா, மாதவன், சங்கீதா, ஓவியா, போன்ற பலர் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்த படத்தில் கமலின் கவிதை பாடலில் உள்ள வரிகளை நீக்க வேண்டும் என்றும், ஒருதரப்பினர் போர் கொடி உயர்த்தினர். கமல்ஹாசனை எதிர்த்து அவரின் அலுவலகம் முன்பு ஒரு போராட்டமே நடந்த நிலையில், அரைமனத்துடன் கமல் அந்த வரிகளை நீக்க ஒப்புக்கொண்டார். குறிப்பிட்ட வரிகள் நீக்கிய பின்னரே அந்த பாடம் இடம்பெற்றது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்
சிலம்பரசன்
கமல்ஹாசன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved