ரஜினி, விஜய் இல்ல; முதன்முதலில் 1000 கோடி வசூல் அள்ளிய தமிழ் ஹீரோவின் சொத்து மதிப்பு இதோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கே ஆயிரம் கோடி வசூல் என்பது சவாலாக உள்ள நிலையில், அதை அசால்டாக அள்ளிய தமிழ் நடிகர் பற்றி பார்க்கலாம்.
1000 Crore Collected First Tamil Hero
தமிழ் சினிமாவில் ஒரு சைடு ஆக்டராக நடித்து, பின்னர் ஹீரோவாகி, தற்போது பான் இந்தியா நடிகராக வலம் வரும் ஒருவர், குறுகிய காலகட்டத்தில் 50 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களுக்கே எட்டாக்கனியாக இருக்கும் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை முதன்முதலில் எட்டியதும் இவர் தான். இந்த நடிகருக்கு தற்போது 47 வயது ஆகிறது. இன்று தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடும் அந்த பான் இந்தியா நடிகரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Vijay sethupathi
அந்த நடிகர் வேறுயாருமில்லை... மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தான். இவர் சினிமாவுக்கு வரும் முன் குடும்ப வறுமை காரணமாக பல்வேறு வேலைகள் செய்துவந்தார். குறிப்பாக சேல்ஸ்மேன், டெலிபோன் பூத் ஆபரேட்டர் என பல வேலைகளை செய்து வந்த இவருக்கு துபாயில் வேலை கிடைத்ததும் அங்கு சென்று சம்பாதிக்க தொடங்கினார். இந்தியாவில் வாங்கியதைவிட அங்கு நான்கு மடங்கு அதிக சம்பளம் வாங்கி வந்தார் விஜய் சேதுபதி.
vijay sethupathi Family
துபாயில் வேலை பார்க்கும் போது விஜய் சேதுபதிக்கு ஆன்லைனில் காதல் மலர்ந்தது. இவர் தனது மனைவி ஜெஸ்ஸியை ஆன்லைனிலேயே காதலித்து வந்தார். நிச்சயதார்த்தத்தின் போது தான் இவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டார்களாம். இவர்களுக்கு சூர்யா சேதுபதி என்கிற மகனும், ஸ்ரீஜா என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே சினிமாவில் நடித்துள்ளனர். ஸ்ரீஜா, விஜய் சேதுபதி உடன் முகிழ் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். சூர்யா சேதுபதியும் தன் தந்தையுடன் நானும் ரெளடி தான், சிந்துபாத் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் தற்போது பீனிக்ஸ் என்கிற படம் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... டிக்கெட் டூ பினாலே வெற்றியாளரை அறிவிக்க - பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அறிவித்த விஜய் சேதுபதி!
Vijay Sethupathi Birthday
தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, அடுத்தடுத்து பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களில் நடித்து வெற்றி கண்டதன் மூலம் கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். நடித்தால் ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல், ரஜினி, விஜய், கமல் போன்ற டாப் ஹீரோக்களுக்கு வில்லனாகவும் நடித்து தன்னுடைய நட்சத்திர அந்தஸ்தை உயர்த்திக் கொண்டார்.
vijay sethupathi Salary
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலில் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். இவர் பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருந்தார். அப்படம் உலகளவில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதுமட்டுமின்றி சீனாவில் அண்மையில் இவர் நடித்த மகாராஜா படம் ரிலீஸ் ஆகி அங்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை படைத்தது. அங்கு மட்டும் 90 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் தான் சீனாவில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
vijay sethupathi Networth
இப்படி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் விஜய் சேதுபதி, இன்று தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி விஜய் சேதுபதிக்கு ரூ.140 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாம். அதுமட்டுமின்றி ஒரு படத்துக்கு ரூ.30 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.60 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... மகாராஜா உள்பட சீனாவில் வசூல் மழை பொழிந்த டாப் 10 இந்திய திரைப்படங்கள்