காதலர் தினத்தன்று காதலன் போட்டோவை வெளியிட்ட பிக் பாஸ் ஜாக்குலின்!
காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் ஜாக்குலின் தன்னுடைய காதலன் யார் என்பதை இன்ஸ்டா பதிவு மூலம் உறுதி செய்துள்ளார்.

பிக் பாஸ் ஜாக்குலின்
விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ஜாக்குலின். அந்நிகழ்ச்சியில் ரக்ஷன் உடன் சேர்ந்து தொகுத்து வழங்கினார் ஜாக்குலின். இவர்கள் காம்போ ஹிட் அடித்ததால் அடுத்தடுத்த சீசனிலும் இவர்களே தொகுப்பாளராக பணியாற்றினர். பின்னர் ஜாக்குலினுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதுவும் முதல் படமே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் நடித்தார். நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார் ஜாக்குலின்.
ஜாக்குலின் படைத்த சாதனை
சினிமாவில் சைடு ரோலில் நடித்த ஜாக்குலினை சீரியலில் ஹீரோயினாக்கி அழகு பார்த்தது விஜய் டிவி. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி என்கிற சீரியலில் நாயகியாக நடித்தார் ஜாக்குலின். அந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அந்த சீரியல் முடிவடைந்த பின்னர் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு தேடி வந்தது. அதை ஏற்று விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார் ஜாக்குலின்.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் ஜாக்குலின் பிறந்தநாள்; தடபுடலாக கொண்டாடிய கோவா கேங்!
ஜாக்குலின் காதலர்
இந்த சீசனில் பைனல் வரை சென்ற ஜாக்குலின், பணப்பெட்டியை எடுக்க ஆசைப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் வராததால் கண்ணீருடன் வெளியேற்றப்பட்டார். அதுமட்டுமின்றி பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிக முறை நாமினேட் ஆன போட்டியாளர் என்கிற சாதனையையும் படைத்தார் ஜாக்குலின். இவர் 8வது சீசனில் மொத்தம் இருந்த 15 வாரத்திலும் நாமினேட் ஆனார். இதுவரை எந்த ஒரு போட்டியாளரும் இத்தனை முறை நாமினேட் ஆனதில்லை.
ஜாக்குலின் இன்ஸ்டா ஸ்டோரி
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் ஜாக்குலின், அதில் பதிவுகளை போட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் காதலர் தினமான இன்று தன்னுடைய காதலன் யார் என்பதையும் உறுதி செய்திருக்கிறார் ஜாக்குலின். அதன்படி யுவராஜ் செல்வநம்பி என்பவரை தான் ஜாக்குலின் காதலிக்கிறாராம். காதலர் தினத்திற்காக நீதானே என் பொன்வசந்தம் என்கிற பாடலுடன் யுவராஜை ஜாக்குலின் டேக் செய்து இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்திருக்கிறார். அதற்கு அவரோ என் கொத்தமல்லி என ஜாக்குலினை செல்லமாக அழைத்துள்ளார். இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... யார் இந்த தங்கப்புள்ள? பிக் பாஸ் 8 மூலம் மக்கள் மனதை வென்ற இந்த நடிகை யாருன்னு தெரியுதா?