அதிக சம்பளம் கேட்ட வடிவேலு... ‘நீ நடிக்கவே வேணாம் கிளம்பு’னு விரட்டிவிட்ட பாரதிராஜா - இது எப்ப?
கிழக்கு சீமையிலே படத்தில் நடிப்பதற்காக அதிக சம்பளம் கேட்ட வடிவேலுவை பாரதிராஜா விரட்டிவிட்ட பின்னர் அவர் எப்படி அந்த படத்தில் நடிக்க கமிட் ஆனார் என்கிற சுவாரஸ்ய தகவலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவும் முக்கியமானவர். தன் வித்தியாசமான உடல்மொழியால் ரசிகர்களை சிரிக்க வைத்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தையே பிடித்துள்ளார் வடிவேலு. மீம் கிரியேட்டர்களின் கடவுளாகவும் திகழ்ந்து வருகிறார் வடிவேலு. இவரது ரியாக்ஷன்கள் தான் இன்று மீம் டெம்பிளேட்டாக சோசியல் மீடியா முழுவதும் ஆக்கிரமித்து உள்ளன. அந்த அளவுக்கு மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளார் வடிவேலு.
வடிவேலு பல்வேறு நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்கள் சிரிக்க வைத்தாலும், நிஜ வாழ்க்கையில் அவர் சற்று கராரான ஆள் என்றே கூறுகின்றனர். அவருடன் நடித்த சக நடிகர்கள் பலர் வடிவேலுவின் உண்மை முகமே வேறு என சமீப காலமாக யூடியூப்பில் பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத வடிவேலு, சினிமாவில் தற்போது தனது செகண்ட் இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கி, பிசியாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... டேஞ்சர் ஜோனில் இருந்த சிவாங்கியை காப்பாற்றிய நடுவர்கள்... அப்போ குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷன் இவரா?
இந்நிலையில், கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்ட வடிவேலுவை பாரதிராஜா விரட்டிவிட்ட சம்பவம் குறித்து பின்னர் அவர் அப்படத்தில் எப்படி நடிக்க கமிட் ஆனார் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாரதிராஜா இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் கிழக்கு சீமையிலே படமும் ஒன்று. இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தான் தயாரித்தார். இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுத்தனர்.
இதை அறிந்த வடிவேலு, சரி பெரிய பட்ஜெட் படம்தானே, நாமும் சம்பளத்தை உயர்த்திக் கேட்கலாம் என முடிவெடுத்து, இப்படத்தில் நடிக்க ரூ.25 ஆயிரம் சம்பளமாக கேட்டாராம். இதனால் டென்ஷன் ஆன பாரதிராஜா, நீ நடிக்கவே வேண்டா கிளம்புனு விரட்டிவிட, கண்ணீருடன் அங்கிருந்து சென்றிருக்கிறார் வடிவேலு. இதைப்பார்த்த அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு, என்னப்பா ஆச்சுனு வடிவேலுவிடம் கேட்க, அவரும் நடந்ததை கூறி இருக்கிறார்.
பின்னர் வடிவேலு கேட்ட ரூ.25 ஆயிரம் சம்பளத்தை கொடுத்து அவரை சமாதானப்படுத்திய தாணு, சம்பள விஷயத்தையெல்லாம் என்கிட்ட கேட்கலாம்லப்பா என ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தாராம். இந்த தகவலை அவரே ஒரு பேட்டியிலும் பகிர்ந்திருந்தார். இந்த படம் வடிவேலுவுக்கு நல்ல பெயரையும் பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ரஜினியின் அடுத்த படத்தை தட்டித்தூக்கப்போவது யார்? லோகேஷ் கனகராஜுக்கு போட்டியாக களமிறங்கிய பெண் இயக்குனர்!