டேஞ்சர் ஜோனில் இருந்த சிவாங்கியை காப்பாற்றிய நடுவர்கள்... அப்போ குக் வித் கோமாளியில் இந்த வார எலிமினேஷன் இவரா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் சிவாங்கி, சிருஷ்டி டாங்கே மற்றும் ஷெரின் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர்.
ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆன நிகழ்ச்சியாக திகழ்ந்து வருவது குக் வித் கோமாளி. சமையல் நிகழ்ச்சியான இது இதுவரை 3 சீசன்கள் முடிந்து, தற்போது 4வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் டைட்டிலை ஜெயித்தனர். தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனும் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.
இந்த சீசனின் சிறப்பம்சம் என்னவென்றால், கடந்த 3 சீசன்களாக கோமாளியாக கலக்கி வந்த சிவாங்கி, இந்த சீசனில் குக் ஆக களமிறங்கி கலக்கி வருகிறார். 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை 4 பேர் எலிமினேட் ஆகி உள்ளனர். அந்த நால்வருமே ஆண் போட்டியாளர்கள் தான். இதையடுத்து இந்த வாரம் 5-வது எலிமினேஷன் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் சிவாங்கி, மைம் கோபி, ஷெரின், சிருஷ்டி, விசித்ரா, ஆண்ட்ரியன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதையும் படியுங்கள்... ரஜினியின் அடுத்த படத்தை தட்டித்தூக்கப்போவது யார்? லோகேஷ் கனகராஜுக்கு போட்டியாக களமிறங்கிய பெண் இயக்குனர்!
அதன்படி நேற்று நடைபெற்ற அட்வாண்டேஜ் டாஸ்க்கில் விசித்ரா வெற்றிபெற்றார். இதையடுத்து இன்று நடைபெற்ற முதல் டாஸ்க்கின் முடிவில் நன்றாக சமைத்த விசித்ரா, மைம் கோபி மற்றும் ஆண்ட்ரியன் ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். எஞ்சியுள்ள சிவாங்கி, சிருஷ்டி, ஷெரின் ஆகிய மூன்று போட்டியாளர்களும் டேஞ்சர் ஜோனுக்கு சென்றனர். இதையடுத்து இவர்கள் மூவருக்கும் இடையே போட்டி நடத்தப்பட்டது.
இதில் நன்றாக சமைத்தன் காரணமாக முதலில் சிவாங்கியை நடுவர்கள் காப்பாற்றினர். இதையடுத்து எஞ்சி இருந்த சிருஷ்டி மற்றும் ஷெரின் இருவரில் இருந்து, ஷெரின் எலிமினேட் செய்யப்படுவதாக அறிவித்தனர். இதனால் ஷெரின் ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர். ஷெரின் எலிமினேட் செய்யப்பட்டதை அடுத்த சிருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, விசித்ரா, ஆண்ட்ரியன் ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதையும் படியுங்கள்... 'ருத்ரன்' பட வெற்றியை முதியோர் இல்லத்தில் கொண்டாடிய ராகவா லாரன்ஸ் - சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர்!