பாரதிராஜாவை பாடகராக்கி அழகுபார்த்த ஏ.ஆர்.ரகுமான்; அட ‘இந்த’ ஹிட் பாடலை பாடியது அவரா?
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அறிமுகமான பாடகர்கள் ஏராளம், அந்த பட்டியலில் பாரதிராஜாவும் இருக்கிறார். அவர் பாடிய பாடல் பற்றி பார்க்கலாம்.

Bharathiraja Sing a Song in AR Rahman Music : தமிழ் சினிமாவில் பல மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்தவர் பாரதிராஜா. கிராமத்து கதையம்சத்தில் இவர் படம் எடுத்தால் அந்த படம் கன்பார்ம் ஹிட்டு தான் என சொல்லும் அளவுக்கு ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார் பாரதிராஜா. ஆரம்ப காலகட்டத்தில் பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு இளையராஜா இசையமைத்து வந்தார். ஒரு கட்டத்தில் இசைஞானி உடன் மனக்கசப்பு ஏற்பட்டதால் ஏ.ஆர்.ரகுமான் பக்கம் திரும்பினார் பாரதிராஜா.
Bharathiraja
பாரதிராஜா பாடிய பாடல்
இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, தாஜ்மஹால், கண்களால் கைது செய் போன்ற படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படங்களில் பாடல் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தன. ஏ.ஆர்.ரகுமான் உடன் தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றிய பாரதிராஜா, அவரது இசையில் ஒரு பாடலும் பாடி இருக்கிறார். ‘என் இனிய தமிழ் மக்களே’ என கணீர் குரலில் பாரதிராஜா பேசி கேட்டிருக்கிறோம். ஆனால் அவர் ஒரே ஒரு பாடலை பாடி உள்ளார்.
இதையும் படியுங்கள்... போன வருஷம் இளையராஜா மகள்; இந்த வருஷம் பாரதிராஜா மகன் - வாரிசுகளின் இறப்பால் இடிந்துபோன இமயங்கள்!
Karuthama Movie Song
பாரதிராஜாவை பாடகர் ஆக்கிய ஏ.ஆர்.ரகுமான்
பாரதிராஜா பாடிய பாடல் கருத்தம்மா படத்தில் இடம்பெற்றது. அப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெற்ற ‘காடு பொட்ட காடு’ என்கிற பாடலை தான் பாரதிராஜா பாடி இருந்தார். அப்பாடலில் ஆரம்பத்தில் வரும் சில வரிகளை மட்டும் பாரதிராஜா பாடி இருந்தார். மலேசியா வாசுதேவன் உடன் சேர்ந்து இப்பாடலை பாடி இருந்தார் பாரதிராஜா. மண்ணின் பெருமையும் பெண்ணின் பெருமையும் பேசும் இந்த பாடலுக்கு பாரதிராஜாவின் குரல் ஒரு பிளஸ் ஆக அமைந்திருந்தது. இந்த பாடலுக்கு பின் அவர் எந்த படத்திலும் பாடவில்லை.
Director Bharathiraja
கருத்தம்மாவுக்கு 3 தேசிய விருதுகள்
கருத்தம்மா திரைப்படம் மூன்று தேசிய விருதுகளையும் வென்றது. அதில் இரண்டு தேசிய விருது பாடல்களுக்கு கிடைத்தது. அதன்படி பாடகி ஸ்வர்னலதாவுக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதும், சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது வைரமுத்துவுக்கும் கிடைத்தது. இதுதவிர 1995-ம் ஆண்டு சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் கருத்தம்மா தட்டிச் சென்றது. காலம் கடந்து கொண்டாடப்படும் ஒரு காவியமாகவே கருத்தம்மா திரைப்படம் உள்ளது.
இதையும் படியுங்கள்... 16 வயசுல நடிக்க வந்த ரேவதி... பளார்னு ஒரு அறைவிட்ட பாரதிராஜா - இயக்குனர் இமயத்தின் இன்னொரு முகம்..!