Asianet News TamilAsianet News Tamil

16 வயசுல நடிக்க வந்த ரேவதி... பளார்னு ஒரு அறைவிட்ட பாரதிராஜா - இயக்குனர் இமயத்தின் இன்னொரு முகம்..!

மண்வாசனை படத்தில் நடித்தபோது இயக்குனர் பாரதிராஜா தனது கன்னத்தில் பளார் என அறைவிட்டதாக நடிகை ரேவதி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Bharathiraja Slap actress Revathi during her Debut movie Mann Vasanai gan
Author
First Published Jun 25, 2024, 3:28 PM IST

என் இனிய தமிழ் மக்களே என்கிற குரல் கேட்ட உடன் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருபவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா தான். தமிழ் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியோடு தேனியில் இருந்து சென்னைக்கு வந்த இவருக்கு முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. அந்த படம் தான் 16 வயதினிலே. சினிமா என்றாலே நகரத்தில் தான் எடுக்கப்படும் என்கிற பிம்பத்தை உடைத்து கிராமத்துக்குள் சினிமாவை கொண்டு சென்ற பெருமை பாரதிராஜாவையே சேரும். 

இவரது நாட்டுப்புறக் கதைகளை மெருகேற்றியது இசையமைப்பாளர் இளையராஜா என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு இவர்கள் காம்போவில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன. பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்த பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து வந்த இயக்குனர்கள் பிற்காலத்தில் கோலிவுட்டில் கோலோச்சினர்.

இதையும் படியுங்கள்... Emergency : விஜய்யின் கோட் படத்தை பதம் பார்க்க வருகிறது கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி - ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bharathiraja Slap actress Revathi during her Debut movie Mann Vasanai gan

அப்படி அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் பாப்புலர் ஆனவர்கள் ஏராளம். பாக்யராஜ் தொடங்கி மணிவண்ணன், மனோபாலா, மனோஜ்குமார், சீமான், சித்ரா லட்சுமணன், பொன்வண்ணன், லீனா மணிமேகலை என அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும். இயக்குனர் பாரதிராஜாவினால் அறிமுகம் செய்யப்பட்ட நடிகைகளும் ஏராளம். ராதிகா தொடங்கி, ராதா, ரேவதி, பிரியாமணி, கார்த்திகா போன்ற கதாநாயகிகளை மெருகேற்றிய பெருமை பாரதிராஜாவையே சேரும்.

அப்படி பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு பிரபலமானவர் தான் நடிகை ரேவதி. பாரதிராஜா இயக்கிய மண்வாசனை படம் மூலம் ரேவதி ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் பாண்டியனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேவதி. பாரதிராஜாவுக்கு ஒரு பழக்கமும் இருக்கிறது, அது என்னவென்றால் அவர் தனது படத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு சரிவர நடிகக் வராவிட்டால் கன்னத்தில் பளார் என அறைவிடவும் தயங்க மாட்டார்.

Bharathiraja Slap actress Revathi during her Debut movie Mann Vasanai gan

அப்படி பாரதிராஜா கையால் அடிவாங்கிய நடிகைகள் ஏராளம். அந்த வரிசையில் நடிகை ரேவதியும் ஒருவர். அவர் மண்வாசனை படத்தில் நடித்தபோது கிளைமாக்ஸ் காட்சியில் கத்தி பேசும்படியான சீனை படமாக்கி வந்தாராம் பாரதிராஜா. அந்த சீனில் ரேவதி கத்தி பேசாததால் கோபமடைந்த பாரதிராஜா அவரது கன்னத்தில் பளார் என அறைவிட்டாராம். அதன்பின்னரே அவர் சொன்னபடி பேசி டேக் ஓகே பண்ணியதாக ரேவதி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அவர் அடித்த அந்த அடி தன்னை என்கரேஜ் செய்ததே தவிர அவர் மீது கோபத்தை ஏற்படுத்தவில்லை என ரேவதி கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... பாலகிருஷ்ணாவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார் - வைரலாகும் போட்டோஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios