கங்கனா ரணாவத் ஹீரோயினாக நடித்து இயக்கி இருக்கும் எமர்ஜென்சி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் தமிழிலும் தாம் தூம், தலைவி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்திய திரையுலகிலேயே முதன்முறையாக ரூ.100 கோடி வசூல் அள்ளிய முதல் ஹீரோயின் என்கிற சாதனைக்கு சொந்தக்காரியாகவும் இருக்கிறார் கங்கனா. இவர் நடிகையாக மட்டுமின்றி இயக்குனராக தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார்.

இதற்கு முன்னர் மணிகர்னிகா என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்த கங்கனா தற்போது மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள கங்கனா, எமர்ஜென்சி என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இது இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட அவர நிலையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இப்படத்தை இயக்கியுள்ளதோடு மட்டுமின்றி இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கங்கனா.

இதையும் படியுங்கள்... Abdul Hameed : நான் சாகல... 3வது முறை உயிர் பிழைத்திருக்கிறேன் - கண்ணீருடன் அப்துல் ஹமீது கொடுத்த விளக்கம்

எமர்ஜென்சி திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி எமர்ஜென்சி திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 6-ந் தேதி திரைக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளார் கங்கனா.

இதன்மூலம் கங்கனாவின் எமர்ஜென்சி திரைப்படம் விஜய்யின் கோட் படத்துடன் நேருக்கு நேர் மோத உள்ளதும் உறுதியாகி உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படமும் செப்டம்பர் மாதம் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதுவும் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால் இரண்டு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... சொந்த தாய்மாமா பொண்ணு... இராணுவத்துல வேலை பாக்குறாங்க - மனைவி பற்றிய ஆச்சர்ய தகவலை வெளியிட்ட சிங்கம்புலி