- Home
- Gallery
- சொந்த தாய்மாமா பொண்ணு... இராணுவத்துல வேலை பாக்குறாங்க - மனைவி பற்றிய ஆச்சர்ய தகவலை வெளியிட்ட சிங்கம்புலி
சொந்த தாய்மாமா பொண்ணு... இராணுவத்துல வேலை பாக்குறாங்க - மனைவி பற்றிய ஆச்சர்ய தகவலை வெளியிட்ட சிங்கம்புலி
நகைச்சுவை நடிகர் சிங்கம் புலி, தன்னுடைய மனைவி ராணுவத்தில் வேலை பார்த்து வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

Singam puli
கோலிவுட்டில் தற்போது பரபரப்பாக பேசப்படும் நடிகர் என்றால் அது சிங்கம் புலி. இதற்கு காரணம் மகாராஜா படத்தில் அவரின் மிரட்டலான நடிப்பு என்றே சொல்லலாம். அப்படத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அவரது கேரக்டர் அமைந்திருந்தது. படம் பார்த்த அனைவருக்கும் சர்ப்ரைஸாக இருந்தது சிங்கம் புலியின் நடிப்பு. ஏனெனில் இதுவரை காமெடி கதாபாத்திரங்களில் கலக்கி வந்த அவர் இப்படத்தில் மாறுபட்ட வேடம் ஏற்று நடித்திருந்தார்.
Actor Singam puli
சிங்கம் புலியை பெரும்பாலும் காமெடி நடிகராகவே பலருக்கும் தெரியும், ஆனால் அவரும் ஒரு இயக்குனர் தான். அவர் அஜித் நடித்த ரெட், சூர்யாவின் மாயாவி போன்ற படங்களை இயக்கி உள்ளார். இதுதவிர பாலா இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது வென்ற பிதாமகன், நான் கடவுள் போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றி உள்ளார். மேலும் ரேணிகுண்டா படத்திற்கு வசனம் எழுதியதும் சிங்கம் புலி தான். இதுதவிர இயக்குனர் சுந்தர் சி-யிடம் 13 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Abdul Hameed : நான் சாகல... 3வது முறை உயிர் பிழைத்திருக்கிறேன் - கண்ணீருடன் அப்துல் ஹமீது கொடுத்த விளக்கம்
Singam puli Wife
மகாராஜா படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு பின்னர் பல்வேறு பேட்டிகளை அளித்து வரும் நடிகர் சிங்கம் புலி தன்னுடைய மனைவி பற்றி பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : “என்னுடைய மனைவி ஆர்மியில் கர்னலாக இருக்கிறார். நான் கல்யாணம் முடிக்கும்போது கேப்டனாக இருந்தார். அப்புறம் மேஜர் ஆனார். தற்போது கர்னலாக பணியாற்றி வருகிறார். என்னுடையது காதல் திருமணம் இல்லை. அவர் என்னுடைய சொந்த மாமா பொண்ணு தான்.
Director Singam puli
கார்கில் வார் சமயத்தில் இருந்தே ஆஸ்பிட்டல் சர்வீஸ்ல இருக்காங்க. தற்போது ஜபல்பூரில் பணியாற்றி வருகிறார். அவர் பெரும்பாலும் இந்தி படங்கள் தான் பார்ப்பார். நான் இவ்வளவு படங்கள் நடிச்சிருந்தாலும் அவர் வெறும் 5 படங்கள் தான் பார்த்திருக்கிறார். அவர் அந்தமானை சேர்ந்தவர். அஜித் படம் பண்ணிட்டு என் மனைவியை டிவிஎஸ் 50ல அழைத்து சென்றேன். அப்போது கூட எனக்கு கார் வாங்கி தரேன்னு சொன்னவர் என் மனைவி. எனக்கு ரெண்டு மகன்கள் இருக்கிறார்கள். நான் இந்த அளவு உயர என்னுடைய மனைவியின் சப்போர்ட் தான் காரணம்” என நெகிழ்ச்சி உடன் கூறி இருக்கிறார் சிங்கம் புலி.
இதையும் படியுங்கள்... Upasana : 1000 கோடிக்கு மேல் சொத்து... ராம்சரண் மனைவி உபாசனாவின் வியக்க வைக்கும் Net Worth விவரம் இதோ