- Home
- Gallery
- Upasana : 1000 கோடிக்கு மேல் சொத்து... ராம்சரண் மனைவி உபாசனாவின் வியக்க வைக்கும் Net Worth விவரம் இதோ
Upasana : 1000 கோடிக்கு மேல் சொத்து... ராம்சரண் மனைவி உபாசனாவின் வியக்க வைக்கும் Net Worth விவரம் இதோ
தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி உபாசனாவுக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் விவரத்தை பார்க்கலாம்.

Ramcharan, Upasana Konidela
தெலுங்கு திரையுலகில் மெகா ஸ்டாராக கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம்சரணும் தற்போது முன்னணி நடிகராக கலக்கி வருகிறார். நடிகர் ராம்சரணுக்கு கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் ஆனது. அவர் உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின் சுமார் 10 ஆண்டுகளாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு கிளின்காரா என்கிற பெண் குழந்தை பிறந்தது.
Ramcharan Wife Upasana Konidela
ராம்சரண் மிகவும் பணக்கார நடிகர்களில் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும், ஆனால் அவரின் மனைவி எவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பெண் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப் பற்றி தற்போது விரிவாக பார்க்கலாம். ராம்சரண் மனைவி உபாசனா, தொழிலதிபர் பிரதாப் சி. ரெட்டியின் பேத்தி ஆவார். அதுமட்டுமின்றி புகழ்பெற்ற அப்பல்லோ மருத்துவமனையின் துணைத் தலைவராக உயர் பதவியில் உள்ளார் உபாசனா.
Upasana Konidela
இதுதவிர 'பி பாசிட்டிவ்' என்கிற இதழின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார் உபாசனா. மேலும் குடும்ப நலத்திட்ட காப்பீட்டு நிறுவனமான TPA இன் நிர்வாக இயக்குநராகவும் அவர் பதவி வகித்து வருகிறார். இண்டர்நேஷனல் பிசினஸ் மார்கெட்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட் படித்து பட்டம் பெற்றுள்ள உபாசனா தொண்டு நிறுவனங்களிலும் தீவிர பங்காற்றி வருகிறார்.
இதையும் படியுங்கள்... வெயிட்டு பார்ட்டியா தான் இருக்காரு... வரலட்சுமியின் வருங்கால கணவர் நிகோலாய் இவ்வளவு பெரிய பணக்காரரா?
Ramcharan, upasana net worth
ராம்சரண் - உபாசனா ஜோடி தான் இந்தியாவின் பணக்கார பிரபல ஜோடிகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றனர். இந்த ஜோடியின் நிகர மதிப்பு ரூ.2500 கோடியாம். இதில் உபாசனாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.1,130 கோடி என்றும், ராம் சரணின் சொத்து மதிப்பு ரூ.1,370 கோடி என்றும் கூறப்படுகிறது.
Upasana Konidela Business
உபாசனாவின் தாத்தா பிரதாப் சி.ரெட்டி தலைமையிலான அப்பல்லோ மருத்துவமனையின் சந்தை மதிப்பு தோராயமாக ரூ.77,000 கோடி இருக்குமாம். அதுமட்டுமின்றி இந்தியாவின் 100 பில்லியனர்களில் ஒருவராகவும் பிரதாப் ரெட்டி திகழ்ந்து வருகிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.22,000 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது..
Upasana Konidela Net worth
உபாசனாவின் தந்தை அனில் காமினேனி KEI எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதேபோல் உபாசனாவின் தாயார் ஷோபனா, அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக துணைத் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... திருமணத்திற்கு 44 வருட பழமையான அம்மாவின் புடவையை கட்டி இருந்த சோனாக்ஷி! வரவேற்பு புடவையின் ரேட் தெரியுமா?