சென்சாருக்கு சென்ற பீஸ்ட்...பின்னர் தான் ரிலீஸ் தேதி அறிவிப்பாம்
ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் படம் சென்சாருக்கு அனுப்பட்டுள்ளதாம் அதோடு சென்சாருக்கு பிறகுதான் ரிலீஸ் தேதி உறுதியாகும் என சொல்லபப்டுகிறது.

beast
நெல்சனின் பீஸ்ட் :
கோலமாவு கோகிலா , டாக்டர் படங்களை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் உருவாகி வருகிறது. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
beast
டாக்டர் கூட்டணி :
டாக்டர் படத்தில் இணைந்து பணியாற்றிய நெல்சன், சிவகார்த்திகேயன், அனிரூத் மூவரும் பீஸ்ட் படத்திலும் சேர்ந்துள்ளனர். சிவகார்த்திகேயன் வரிகளில் அனிரூத் இசையமைப்பில் உருவான அரபிக் குத்து பாடல் வெளியாவதற்கு முன்னரே இவர்கள் நடிப்பில் வெளியான ப்ரோமோ ஹெட்ரிக் வெற்றி கொடுத்தது.
beast first single
அரபிக் குத்து :
அரேபிய மொழி போன்ற வடிவில் உருவான இந்த பாடலில் விஜய் -பூஜா ஹெக்டேவின் நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதோடு இந்த பாடல் காதலர் தின சிறப்பாக வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்துள்ளது.
beast
ரீல்ஸுகளில் அள்ளும் அரபிக் குத்து :
பாடல் ஹிட் கொடுக்க ரீல்ஸ் அவசியம் என்றாகி விட்டது. அதன்படி பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து ரீல்ஸ் செய்து விட்டனர். சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை தூள் கிளப்பிய அரபிக் குத்து.
மேலும் செய்திகளுக்கு..Jolly O Gymkhana song : விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலும் காப்பியா?- அனிருத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
beast
இறுதி நெருங்கிய பீஸ்ட் :
நண்பன் பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு உள்ளது.
beast
‘ஜாலியோ ஜிம்கானா’ :
இந்த படத்திலிருந்து இரண்டாவது சிங்குளாக ‘ஜாலியோ ஜிம்கானா’ வெளியிடப்படவுள்ளது. இந்த பாடலை விஜய் சொந்த குரலில் பாடியுள்ளார். இதற்கான ப்ரோமோ வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்த பாடல் வருகிற 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. Jolly O Gymkhana song : விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’வுக்கு அர்த்தம் என்ன? - பீஸ்ட் பாடலாசிரியர் விளக்கம்
beast
ஏப்ரல் வெளியீடு :
வருகிற ஏப்ரல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் என்பதை உறுதி செய்துள்ள படக்குழு இன்னும் தேதியை அறிவிக்கவில்லை. இதற்கிடையே ட்ரைலர் ஏப்ரல் 2-ம் தெத்து வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
beast
சென்சாருக்கு சென்ற பீஸ்ட் :
இந்நிலையில் பீஸ்ட் சென்சார் கட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ் கிடைத்தபிறகே ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது. அதோடு ஏப்ரல் 13 -ம் தேதி ரிலீஸ் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.