Jolly O Gymkhana song : விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலும் காப்பியா?- அனிருத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
Jolly O Gymkhana song : ‘ஜாலியோ ஜிம்கானா’ பாடலின் டியூனைக் கேட்ட நெட்டிசன்கள், இது காப்பி அடிக்கப்பட்ட டியூன் என்பதை கண்டுபிடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
ரிலீசுக்கு ரெடியாகும் பீஸ்ட்
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பீஸ்ட். விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். நெல்சன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஜாலியோ ஜிம்கானா பாடல்
அந்த வகையில், நேற்று பீஸ்ட் படத்தின் 2-வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜாலியோ ஜிம்கானா என்கிற பாடலை விஜய் பாடியுள்ளதாகவும், இப்பாடல் வருகிற மார்ச் 19-ந் தேதி ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதுதவிர விஜய், அனிருத் மற்றும் நெல்சன் இணைந்து நடனமாடுவது போன்ற புரோமோ வீடியோவையும் படக்குழு வெளியிட்டு இருந்தது.
காப்பி சர்ச்சை
இதனால் இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், இந்த பாடலின் டியூனைக் கேட்ட நெட்டிசன்கள், இது காப்பி அடிக்கப்பட்ட டியூன் என்பதை கண்டுபிடித்து ட்ரோல் செய்து வருகின்றனர். அதன்படி சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெறும் பீலா பீலா பாடலின் டீயூனைக் காப்பி அடித்து தான் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளதாக ஒப்பிட்டு வருகின்றனர்.
அரபிக் குத்தும் சிக்கியது
சிலரோ இது பேட்ட படத்தில் இடம்பெறும் ஊலாலா பாடலின் காப்பி என விமர்சித்து வருகின்றனர். ஜாலியோ ஜிம்கானா பாடலோடு ஒப்பிடப்படும் மேற்கண்ட இரண்டு பாடல்களுக்கும் அனிருத் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து பாடலும் காப்பி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Beast Update : ஆடியோ லாஞ்ச் இல்லேனா என்ன... துபாயில் செம்ம டிரீட் வெயிட்டிங்- பீஸ்ட் படத்தின் மெர்சலான அப்டேட்