Jolly O Gymkhana song : விஜய் பாடிய ‘ஜாலியோ ஜிம்கானா’வுக்கு அர்த்தம் என்ன? - பீஸ்ட் பாடலாசிரியர் விளக்கம்
Jolly O Gymkhana song : அனிருத் இசையில் நடிகர் விஜய் இதற்கு முன் பாடியுள்ள செல்ஃபி புள்ள, குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதால் தற்போது ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
வைரல் ஹிட்டான அரபிக் குத்து
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் கடந்த மாதம் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்ட அரபிக் குத்து பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வைரல் ஹிட் அடித்தது. அனிருத், ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருந்த இப்பாடலுக்கு சிவ்கார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதி இருந்தார்.
பீஸ்ட் 2-வது பாடல் ரெடி
இந்நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் 2-வது பாடல் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. அதன்படி அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ஜாலியோ ஜிம்கானா என்கிற பாடல் வருகிற மார்ச் 19-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. அனிருத் இசையில் நடிகர் விஜய் இதற்கு முன் பாடியுள்ள செல்ஃபி புள்ள, குட்டி ஸ்டோரி ஆகிய பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதால் தற்போது ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஜாலியோ ஜிம்கானா அப்டினா என்ன?
இந்நிலையில், இப்பாடல் வரிகளை எழுதியுள்ள பாடலாசிரியர் கு.கார்த்தி, ஜாலியோ ஜிம்கானாவுக்கான அர்த்தம் என்ன என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதன்படி, “எந்த மாதிரி பிரச்சனை நடந்தாலும், அது நடந்தது தான். அதை நம்மால் மாற்ற முடியாது. அதனால் அதைப்பற்றி கவலைப்படாமல் விட்டுட்டு போய்கிட்டே இருக்கணும். என்ன நடந்தாலும் ஜாலியா இருக்கணும், அதுக்கு தான் இந்த பாட்டோட அர்த்தம்” என தெரிவித்துள்ளார்.
ஏப்ரலில் பீஸ்ட் ரிலீஸ்
பீஸ்ட் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் விடிவி கணேஷ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷான் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது.
இதையும் படியுங்கள்... Ajith :காதில் கடுக்கன்.. வெள்ளை தாடி! வில்லன் லுக்கில் அஜித் கொடுத்த கெத்து போஸ்- வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்