Beast movie : மக்கள் வருகை இல்லை... ஒரே நாளில் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட பீஸ்ட்
Beast movie : திரையிடப்பட்ட ஒரே நாளில் பீஸ்ட் திரைப்படம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு உள்ள சம்பவம் படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் திரையிடப்பட்ட ஒரே நாளில் பீஸ்ட் திரைப்படம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்டு உள்ள சம்பவம் படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது தொடர்பாக பீஸ்ட் படத்தை அந்நாட்டில் வெளியிட்ட விநியோகஸ்தர்கள் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: பிரிமியர் ஷோவில் போதிய வரவேற்பை பெறாததன் காரணமாகவும், மேற்கொண்டு திரையிட்டால் வினியோகஸ்தர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதாலும், பீஸ்ட் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. சில இடங்களில் பீஸ்ட் படத்துக்கு பதிலாக கே.ஜி.எஃப் 2 படம் திரையிடப்பட உள்ளது.
பிரான்ஸில் உள்ள பேமஸான தியேட்டர்களில் கூட நிறைய காட்சிகள் ஹவுஸ்புல் ஆகாததால் இத்தகைய முடிவை எடுத்துள்ளோம். இத்தகையை முடிவு எடுப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், அஜித்தின் விவேகம், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல், ரஜினியின் கோச்சடையான் போன்ற படங்களும் இத்தகையை சூழலை சந்தித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... KGF 2 review : ராக்கி பாயின் மாஸ்... மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - ‘கே.ஜி.எஃப் 2’ டுவிட்டர் விமர்சனம்