KGF 2 review : ராக்கி பாயின் மாஸ்... மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - ‘கே.ஜி.எஃப் 2’ டுவிட்டர் விமர்சனம்
KGF 2 review : பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தின் டுவிட்டர் விமர்சனம்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. யாஷ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படத்தை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் டுவிட்டரில் படம் குறித்து பதிவிட்ட வண்ணம் உள்ளனர். தற்போது கே.ஜி.எஃப் 2 படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.
கே.ஜி.எஃப் 2 முதல் பாதியில் நடிகர் யாஷின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது. பிரசாந்த் நீலின் திரைக்கதை அருமை. படமும், படத்தின் கதையும் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. சஞ்சய் தத் வேறலெவல், மிரட்டி இருக்கிறார். இந்திய சினிமாவின் மிகப்பெரிய மைல்கல்லாக கே.ஜி.எஃப் இருக்கும் என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கே.ஜி.எஃப் 2.. என்ன படம், புல்லரிக்கிறது. வலிமையான படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸை மேலும் வலிமை ஆக்கும் என பதிவிட்டு, படம் முழுக்க வெறித்தனமாக இருப்பதாக எமோஜி மூலம் குறிப்பிட்டுள்ளனர்.
பஹ்ரைனில் கே.ஜி.எஃப் 2 படம் பார்த்தேன். இயக்குனர் பிரசாந்த் நீல் படத்தை திறம்பட செதுக்கி உள்ளார். மாஸ் ஆடியன்ஸுக்கு இப்படம் முழு விருந்தாக இருக்கும். யாஷ் சிறப்பாக நடித்துள்ளதாகவும், மிகச்சிறந்த இந்திய படம் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், கிளைமாக்ஸ் பிரம்மிப்படைய செய்ததாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லர் கே.ஜி.எஃப் 2. ஆரம்பம் முதல் இறுதி வரை ஒட்டுமொத்த படத்தையும் தோளில் தாங்கி உள்ளார் யாஷ். ஆக்ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்துக்கு இருக்கின்றன. சிறந்த பொழுதுபோக்கு படமாக கே.ஜி.எஃப் 2 உள்ளதாக நெட்டிசன் ஒருவர் பாராட்டி பதிவிட்டு உள்ளார்.
முதல் பாதியில் நடிகர் யாஷ் மற்றும் வில்லன் சஞ்சய் தத்தின் அறிமுக காட்சிகள், டூஃபான் பாடல், இடவேளை காட்சி ஆகியவை வெறித்தனமாக இருந்தன. மாஸ் காட்சிகள் நிறந்ததாக இரண்டாம் பாதி உள்ளது. அம்மா செண்டிமெண்ட் காட்சி நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. கிளைமாக்ஸும் அருமை. மொத்தத்தில் பிளாக்பஸ்டர் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மாஸ்டர்பீஸ். சேண்டல்வுட்டில் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த படங்களில் ஒன்று கே.ஜி.எஃப். 2. படக்குழுவினர் அனைவரின் கடின உழைப்புக்கும் வாழ்த்துக்கள். பிரசாந்த் நீல் மற்றும் ராக்ஸ்டார் யாஷ் ஆகிய இருவரும் படத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
டுவிட்டரில் ஏராளமான பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் கே.ஜி.எஃப் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் பிரம்மாண்ட வெற்றியை ருசிக்க வாய்ப்புள்ளது.