முதல் நாளே வலிமையை வீழ்த்திய பீஸ்ட்...தெறிக்கவிடும் ப்ரீ ரிலீஸ் காலெக்ஷன்...
ப்ரீ ரிலீஸில் மட்டுமே பீஸ்ட் இதுவரை 230 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். எனவே முதல் நாள் வசூலில் கட்டாயம் வலிமையை பின்னுக்கு தள்ளும் என்னும் ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

beast
நெல்சன் இயக்கத்தில் விஜய் மாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் இன்று வெளியாகி அதகளப்படுத்தி வருகிறது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ள இந்த படம் முதல் நாளில் நல்ல வசூலை பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
beast
ரசிகர்கள் மத்தியில் படம் எடுபட்டிருந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் நேற்று நள்ளிரவே அமெரிக்காவில் திரையிடப்பட்டு விட்டது. அதற்கான ட்வீட்டர் விமர்சனங்களை வெளியாகி விட்டன.
beast
பீஸ்ட் முதல் பாதி குறித்து பதிவிட்டுள்ள அவரது தீவிர ரசிகர்கள் #BeastFDFS #VeeraRaghavan ட்ரெண்டாக்குவதோடு விஜய் தனக்கே உரிய மாஸ் நடிப்பின் மூலம் ரசிகர்களை திருப்திப்படுத்தியுள்ளதாக பெரும்பாலான ட்விட்டர் பதிவிட்டு வருகின்றனர்.
beast
ரசிகர்களை தவிர இன்ன பிறரும் உண்மையான விமர்சங்களை கொடுத்து வருகின்றனர். அதன்படி விஜய் தனது நடிப்பால் முதல் பாதி முழுவதையும் விறுவிறுப்பாக்கியுள்ளதாகவும், இரண்டாவது பாதிக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
Image: Still from the trailer
An entertainer with all elements in place: Beast will not simply be an action-packed film. Though it promises power-packed action sequences, the film is going to be a complete entertainer. It has all the elements from action to comedy, making it a perfect entertainer for the audience.
beast
அதேபோல விஜய் ஹேட்டர்ஸ் விமர்சங்களின் படி தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகவே பதிவிடுகின்றனர்.முதல் பாதியில் கதையே இல்லை, நெல்சனின் காமெடி மட்டுமே உள்ளது என்றும் பகிரங்கமாக விமர்சித்துள்ளனர்.
beast
விமர்சனங்கள் ஒரு புறம் இருந்தாலும் வசூல் ரீதியில் பீஸ்ட் வென்றுவிடும் என்றே தெரிகிறது. சுமார் 190 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள பீஸ்ட் , ப்ரீ ரிலீஸில் மட்டுமே 230 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
beast
எனவே விஜய்யின் பீஸ்ட் முதல் நாளில் 38 கோடி முதல் 40 கோடி வரை வசூல் செய்யும் கூறப்படுகிறது. வலிமை வெளியான முதல் நாளில் 36 கோடியை தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்ததாகவும். படத்தின் மொத்த வசூல் 200 கோடி என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது