விலகி ஓடிய தனுஷ்... வெறித்தனமாக காதலித்த திருமணமான பாடகி! படு பயங்கரமான தகவலை வெளியிட்ட பயில்வான்!
பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன், திருமணமான நடிகை ஒருவர், தனுஷை வெறித்தனமாக காதலித்ததாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகை பொருத்தவரை எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. இது போன்ற சர்ச்சைகளையே youtube தளத்தில் பேசி சமீப காலமாக பிரபலமாகி வருகிறார், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்.
இவர் ஏற்கனவே தனுஷை பற்றி பல கிசுகிசுக்களை பேசி உள்ள நிலையில், தனுஷை மிகவும் தீவிரமாக காதலித்த பாடகி ஒருவரை பற்றியும், அவரால் அந்த பாடகி சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் பேசி உள்ளது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.
Suchitra
தன்னுடைய காந்தக் குரலால் தமிழ் சினிமாவில் பல பாடல்கள் பாடி, பிரபலமானவர் சுசித்ரா. இவர் பிரபல நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் குமார் தனுஷின் நெருங்கிய நண்பர். இதன் காரணமாகவே இவருக்கு தனுஷ் - நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கார்த்திக் குமார் சுசித்ரா வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தாலும், இடையில் ஏற்பட்ட ஒரு சில கருத்து வேறுபாடுகளால் இருவருமே பிரியும் நிலை ஏற்பட்டது.
சுசிக்கு மனநிலை சரியில்லை என்றும், தொடர்ந்து குடியிலேயே மூழ்கி கிடந்ததால், ஏற்பட்ட பிரச்சனை தான் சுசித்ராவிடம் இருந்து நிரந்தரமாக அவரின் கணவர் விவாகரத்து பெற காரணம் என கூறப்பட்டது.
தற்போது யாருக்கும் தெரியாத ஒரு தகவலை தான் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன். அதாவது சுசித்ரா பிரபல நடிகருடன் வைத்திருந்த நெருக்கமான பழக்கம் பற்றி தான் பேசியுள்ளார். சுசியுடன் தனுஷ் சில காலம் நெருக்கமாக பழகியதாகவும், பின்னர் ஒரு கட்டத்தில் அவரை விட்டு விலகவே... அதனை தாங்கி கொள்ள முடியாமலும், அவர் மீது இருந்த தீவிரமான காதலால் தான் சுசி தனுஷ் தன்னை வன்கொடுமை செய்ததாக, தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும் சுசி லீக்ஸ் மூலம் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது. பின்னர் இதுகுறித்து கூறிய சுசி தன்னுடைய டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக ஒரே போடாய் போட்டு இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
'குக் வித் கோமாளி' சீசன் 4 வெற்றியாளருக்கு இத்தனை லட்சம் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதா? வெளியான தகவல்!
பின்னர் இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இதற்கான உரிய சிகிச்சை எடுத்து கொண்டு அதில் இருந்து மீண்டார். சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுசி. அதன் பின்னர் எங்கிருக்கிறார் என்கிற இடமே தெரியாமல் போய் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.