அடுத்தடுத்து அடிவாங்கும் டி ஆர் பி..சந்தியாவை தொடர்ந்து பாக்கியலட்சுமியும் விலகினாரா ?
ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 என மூக்கையா சீரியல்களிலிருந்து நாயகிகளை அதிரடியாக விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். தற்போது பாக்கியலட்சுமி சீரியல் குறித்த தகவல் இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

bharathi kannamma
பாரதி கண்ணம்மா :
விஜய் டிவியின் டி.ஆர்.பியை எங்கோ கொண்டு சென்ற சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நாயகியாக ரோஷினி நடித்து வந்தார்.இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு உண்டு.
bharathi kannamma
கண்ணம்மாவாக வினுஷா :
இந்த சீரியலில் அருண் பாரதியாகவும், ரோஷினி கண்ணம்மாவாகவும் நடித்து வந்தனர். சமீபத்தில் பட வாய்ப்புகளுக்காக ரோஷினி இந்த சீரியலில் இருந்து விலகினார். இதையடுத்து புது கண்ணம்மாவாக வினுஷா நடித்து வருகிறார்.
Bharathi kannamma
கண்ணம்மாவை தொடர்ந்து அஞ்சலி :
கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினியை அடுத்து அகிலன் மற்றும் அவரது மனைவியாக நடித்த கண்மணி மனோகரனும் சீரியலை விட்டு விலகி விட்டனர்.கண்மணி தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்..என்னது!பாரதி கண்ணம்மாவில் இருந்து அஞ்சலியும் விலகிட்டாங்களா?அடுத்தடுத்து எகிறும் நடிகர்களால் வெக்ஸான ரசிகர்கள்
raja rani 2
ராஜா ராணி 2 :
விஜய் டிவியில் நல்ல ரேட்டிங்கை பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் ஆலியா மானஷா நாயகியாக நடித்து வருகிறார். இதன் முதல் பக்கத்தில் ஆலியாவும் அவரது கணவர் சஞ்சீவும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்தனர்.
raja rani 2
பிரசவத்திற்கு சென்ற ஆலியா :
விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ராஜா ராணி 2வில் இருந்து சந்தியாவாக நடித்து வந்த ஆலியா இரண்டாவது பிரசவத்திற்காக இந்த சீரியலில் இருந்து விளக்கியுள்ளார். இவருக்கு பதில் சந்தியாவாக யார் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எகிறி உள்ள நிலையில் ஒரே சந்தியா அது நான் தான் என ரசிகர்ளுக்கு பதில் கூறியிருந்தார் ஆலியா.
Baakiyalakshmi
ராதிகாவாக வந்த ஜெனிஃபர் :
பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து பிரபலமான பாக்கிய லட்சுமியில் ராதிகாவாக நடித்து வந்த ஜெனிஃபர் கர்ப்பமாக இருக்கு காரணத்தால் சீரியலில் இருந்து விலகினார். இவருக்கு பதில் பிக்பாஸ் ரேஷ்மா நடித்து வருகிறார்.
Baakiyalakshmi
பாக்கியலட்சுமி மூத்த மகன் :
ஜெனிஃபரை தொடர்ந்து கடந்த வாரம் பாக்கியலட்சுமியின் மூத்த மகன் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் விலகி இருக்கிறார். தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்..Reshma Pasupulet : பாக்கியலட்சுமி ராதிகாவின் சாரி கிளாமர்..ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து சேலையில் கவர்ச்சி
Baakiyalakshmi
பாக்கியலட்சுமியில் இருந்து விலகும் சுசித்ரா :
இந்நிலையில் இந்த தொடரில் பாக்கிய லட்சுமியாக நடித்து வரும் சுசித்ரா விலக உள்ளதாக தகவல் உலா வந்தன. இது குறித்த கேள்விக்கு சமூக வலைதளத்தில் பதிலளித்த சுசித்ரா. நான் சீரியலில் இருந்து விலகவில்லை. இப்போ கூட நான் சூட்டிங்கில் தான் இருக்கிறேன். சீரியல் காண சூட்டிங்கில் வேலை எல்லாம் போய்கொண்டு இருக்கிறது. நான் எப்படி சீரியலை விட்டு விலகுவேன். இதெல்லாம் பொய்யான தகவல் என்று பேட்டியளித்திருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.