காட்டுக்குள் படப்பிடிப்பு... கண்ட இடத்தில் கைவைத்த நடிகருக்கு கன்னத்தில் பொளேர் என அறைவிட்ட பாகுபலி நடிகை
பாகுபலி படத்தின் மூலம் பேமஸ் ஆன நடிகை நோரா பதேஹி, பாலிவுட் படத்தில் நடித்தபோது தனக்கு நேர்ந்த பாலியன் சீண்டல் குறித்து பேசி உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நோரா பதேஹி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த ரோர் என்கிற படம் மூலம் இந்தியில் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பினார் நோரா. இதன் பலனாக இவருக்கு ஐட்டம் டான்ஸ் ஆட அடுத்தடுத்து வாய்ப்புகள் வரத் தொடங்கின. அதன்படி இவர் முதன்முதலில் பூரி ஜெகன்நாத் இயக்கிய டெம்பர் என்கிற தெலுங்கு படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் ஐட்டம் டான்ஸ் ஆடினார்.
இதையடுத்து ராஜமவுலி இயக்கிய பிரம்மாண்ட திரைப்படமான பாகுபலியில் இடம்பெற்ற மனோகரி என்கிற பாடலில் கவர்ச்சி நடனம் ஆடியதன் மூலம் பேமஸ் ஆன நோரா பதேஹி, இதையடுத்து தமிழில் கார்த்தியின் தோழா மற்றும் மலையாள படங்களிலும் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறார். இதுதவிர இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
இதையும் படியுங்கள்... பீப் சாங் சர்ச்சைக்கு பின்... மீண்டும் அனிருத் உடன் கூட்டணி அமைத்த சிம்பு - அதுவும் யார் டைரக்ஷன்ல தெரியுமா?
இந்நிலையில், நடிகை நோரா பதேஹி சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலிவுட்டில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது : “எனது முதல் இந்தி படமான ரோர் : தி டைகர் ஆஃப் சுந்தர்பேன்ஸ் என்கிற படத்தின் படப்பிடிப்பு வங்கதேசத்தில் உள்ள காடுகளில் நடைபெற்றபோது அதில் என்னுடன் நடித்த சக நடிகர் தவறாக நடக்க முயன்றார். அத்துமீறி நடந்துகொண்ட அவருக்கு ஓங்கி கன்னத்தில் ஒரு அறை வைத்தேன்.
இதையடுத்து அந்த நடிகர் பதிலுக்கு என்னை அறைந்ததும், கோபத்தில் நான் மீண்டும் அவருக்கு ஒரு அறைவிட்டேன். இதையடுத்து அந்த நடிகர் என் தலைமுடியை பிடித்து இழுத்தார். இதையடுத்து எங்கள் இருவருக்குள்ளும் கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் மோசமாக திட்டி சண்டை போட்டுக்கொண்டோம்” என தெரிவித்தார். நடிகை நோரா பதேஹியின் இந்த பேச்சு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... பாரம்பரிய முறைப்படி வேட்டி கட்டி... நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர் - வைரலாகும் போட்டோஸ்