பாரம்பரிய முறைப்படி வேட்டி கட்டி... நடிகை பூர்ணாவுக்கு வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர் - வைரலாகும் போட்டோஸ்
நடிகை பூர்ணாவுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தபோது எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.
மலையாள நடிகையான பூர்ணா கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அவர் தமிழில் முதன்முதலில் நடித்த திரைப்படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு. இப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூர்ணா. இதையடுத்து தகராறு, கந்தக்கோட்டை போன்ற படங்களில் நாயகியாக நடித்த இவருக்கு தமிழில் பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்கவில்லை.
இதனால் அடங்கமறு, காப்பான், தலைவி என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இதுதவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து அசத்திய நடிகை பூர்ணாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது. இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபரான சானித் ஆசிப் அலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இதையும் படியுங்கள்...திடீரென சுவர் ஏறி குதித்து ஷாருக்கான் வீட்டுக்குள் நுழைய முயன்ற 2 பேர் கைது- காரணம் கேட்டு அதிர்ந்துபோன போலீஸ்
இதையடுத்து கர்ப்பமான நடிகை பூர்ணாவுக்கு கடந்த மாதம் பிரம்மாண்டமாக வளைகாப்பு நடத்தப்பட்டது. இதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார் பூர்ணா. இதில் அவரது உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு நடிகை பூர்ணாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது நடிகை பூர்ணாவுக்கு பாரம்பரிய முறைப்படி மீண்டும் வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் கன்னூரில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறைப்படி வேட்டி கட்டி நடிகை பூர்ணாவுக்கு அவரது குடும்பத்தினர் எளிமையாக வளைகாப்பு ஒன்றை நடத்தி உள்ளனர்.
இந்த வளைகாப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நடிகை பூர்ணா, தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நடிகை பூர்ணாவின் இந்த வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்...https://tamil.asianetnews.com/cinema/pathaan-heroine-deepika-padukone-joins-oscars-as-presenter-rqxes2