- Home
- Cinema
- கம்மி சம்பளம் கொடுத்து விபூதி அடிக்க பார்த்த தயாரிப்பாளர்... வேறலெவலில் யோசித்து 4 மடங்கு லாபம் பார்த்த கமல்
கம்மி சம்பளம் கொடுத்து விபூதி அடிக்க பார்த்த தயாரிப்பாளர்... வேறலெவலில் யோசித்து 4 மடங்கு லாபம் பார்த்த கமல்
கம்மி சம்பளத்தை கொடுத்து விபூதி அடிக்க பார்த்த தயாரிப்பாளருக்கு தனது மாஸ்டர் மைண்ட் மூலம் பாடம் புகட்டி கமல்ஹாசன் 4 மடங்கு லாபம் பார்த்த சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

சினிமாவில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் நடிகர் கமல்ஹாசன் ஒரு பல்கலைக்கழகமாகவே திகழ்கிறார். சினிமாவில் அவருக்கு தெரியாமல் எதுவுமே இருக்க முடியாது என சொல்லும் அளவுக்கு அனைத்தையும் தன் விரல் நுனியில் வைத்திருக்கும் ஒரு வித்தகர் தான் கமல்ஹாசன். சினிமாவில் புதுப்புது டெக்னாலஜிகளை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். இப்படி சினிமா எந்த அளவுக்கு அத்துப்படியோ அதேபோல் சினிமாவின் வியாபார யுக்தியும் கமலுக்கு தெரிந்ததே. அந்த வகையில் கேட்ட சம்பளத்தை கொடுக்க மறுத்த தயாரிப்பாளரிடம் இருந்து அதைவிட 4 மடங்கு அதிக தொகையை வாங்கி தான் ஒரு சகலகலா வல்லவன் என்பதை நிரூபித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் அவ்வைசண்முகி. இது அவரது கெரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இப்படத்தில் ஹீரோவாகவும், சண்முகி என்கிற பாட்டி கேரக்டரிலும் நடித்து அசத்தி இருந்தார் கமல்ஹாசன். பெண்ணாக நடித்ததோடு மட்டுமின்றி அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாரு அவரே குரல் கொடுத்து இருந்தார். அவரின் இந்த கடின உழைப்புக்கு பரிசாக அப்படம் பிரம்மாண்ட வெற்றியடைந்தது.
இதையும் படியுங்கள்... மகன் ஆத்விக்குடன் நேரு ஸ்டேடியம் சென்ற ஷாலினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலிவுட் பிரபலம்! வைரலாகும் வீடியோ..!
அவ்வை சண்முகி திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் ரூ.1.5 கோடி சம்பளமாக கேட்டுள்ளார். அந்த காலகட்டத்தில் இது மிகப்பெரிய தொகை என்பதால், இதற்கு தயாரிப்பாளர் நோ சொல்லி உள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட கமல், அப்படி அந்த சம்பளத்தை தர முடியவில்லை என்றால் அவ்வை சண்முகி படத்தின் நான்கு ஏரியாக்களின் வெளியீட்டு உரிமையை தனக்கு வழங்குமாறு கேட்டிருக்கிறார். இதற்கு தயாரிப்பாளரும் ஓகே சொல்லி இருக்கிறார்.
அவ்வை சண்முகி திரைப்படம் வெளியாகி அதிரிபுதிரியான வெற்றியை பெற்றதால், அப்படத்தை நான்கு ஏரியாக்களில் வெளியிட்ட கமல்ஹாசனுக்கு அதன்மூலம் ரூ.5 கோடிக்கும் மேல் லாபம் கிடைத்து இருக்கிறது. இதன்மூலம் இப்படத்திற்காக அவர் கேட்ட சம்பளத்தைவிட நான்கு மடங்கு லாபம் கிடைத்து இருக்கிறது. பேசாமல் கமல்ஹாசன் கேட்ட சம்பளத்தை கொடுத்திருக்கலாமோ.. தப்பு கணக்கு போட்டுட்டோமே என அப்படத்தின் தயாரிப்பாளர் வருந்தினாராம். இப்படி கம்மி சம்பளத்தை கொடுத்து விபூதி அடிக்க பார்த்த தயாரிப்பாளருக்கு தனது மாஸ்டர் மைண்ட் மூலம் பாடம் புகட்டி இருக்கிறார் கமல்ஹாசன்.
இதையும் படியுங்கள்... ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட... புது வீட்டில் குடியேறியதும் தனுஷுக்கு அடித்த யோகம்... குஷியில் வாத்தி