Avatar 2 trailer : 13 வருட காத்திருப்பு..வெளியான அவதார் 2 ட்ரைலர் குறித்த அப்டேட்
Avatar 2 trailer : கடந்த 2009 ஆம் ஆண்டு ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Avatar
மிகவும் வேறுபட்ட கற்பனையில் உருவாகியிருந்த படம் அவதார். ஜேம்ஸ் கேமரூனின் பிரமாண்ட படைப்பான இந்த படம் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
Avatar
காதல் காவியமான டைட்டானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த படைப்பான அவதார் முந்தைய டைட்டானிக் வசூலை முறியடித்திருந்தது. சுமார் 285 கோடி அமெரிக்க டாலர்களை வசூல் செய்து உலகிலேயே அதிக வசூல் ஆன படம் என்கிற பெருமையையும் இந்த படம் பெற்றது.
மேலும் செய்திகளுக்கு.. Bhavana : பாவனாவை கௌரவிக்கும் கேரளா...சர்வதேச திரைப்பட விழாவில் அங்கிகாரம்
avatar 2
இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து 2016 ஆம் ஆண்டு அவதார் படத்தின் இரண்டாம் பாகத்தை படத்தை 5 பாகங்கள் கொண்ட தொகுப்பாக எடுக்க போவதாகவும் ஒவ்வொன்றும் இரண்டு வருட இடைவெளியில் ரிலிஸாகும் எனவும் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்தார்.
avatar 2
அவதாரின் அடுத்தடுத்த பாகங்களிலும் கேட் வின்ஸ்லெட், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், வின் டீசல், ஜோ சல்தானா மற்றும் சாம் வொர்திங்டன் ஆகியோர் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
avatar 2
முழுக்க முழுக்க டெக்னலாஜி உதவியுடன் மேஜிக் உருவாக்கமாக மாறியுள்ள இந்த படம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உலகின் இண்டு இடுக்குகளை நிரப்பியது.
avatar
அவதார் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். கடந்த 2020 ஆம் வருடமே அவதார் 2 படப்பிடிப்பு முழுவதும் முடிந்ததாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அறிவித்திருந்தார்.
avatar
அதோடு இந்த ஆண்டு படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவதார் 2 திரைப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைய முன்னிட்டு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...ஸ்க்ரீனை தெறிக்கவிட்ட புஷ்பா பேன்ஸ்..ஆர்ஆர்ஆர் ரசிகர்களுக்கு முள்வேலி போட்ட தியேட்டர்ஸ்..
Avatar2
ரசிகர்களின் 13 வருட காத்திருப்பானா இந்த படத்தின் ட்ரைலர் வரும் மே 6-ம் தேதி டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தோடு திரையரங்குகளில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.