Madhu Shalini marriage : உடன் நடித்த நடிகரை ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட கமல் பட நடிகை
madhu shalini marriage : திருமண புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்த நடிகை மது ஷாலினிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆந்திராவை சேர்ந்த நடிகை மது ஷாலினி, கடந்த 2005-ம் ஆண்டு மிஸ் ஆந்திரா பட்டத்தை வென்ற பின்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கினார். இதையடுத்து சிரஞ்சீவியின் அண்டரிவாடு என்கிற தெலுங்கு படம் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
இதையடுத்து தொடர்ந்து 2 ஆண்டுகள் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த 2007-ம் ஆண்டு வெளியான பழனியப்பா கல்லூரி படம் மூலம் தமிழில் எண்ட்ரி ஆனார். பின்னர் சில ஆண்டுகள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தவித்து வந்த இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது அவன் இவன் தான். பாலா இயக்கிய இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மது ஷாலினி.
இப்படத்தின் வெற்றிக்கு பின் இவருக்கு கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ராஜேஷ் எம் செல்வா இயக்கிய தூங்காவனம் படத்தில் நடித்தார். இப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இவர் லிப்லாக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து பஞ்சராக்ஷரம் படத்தில் நடித்தார். கடைசியாக கடந்த மாதம் வெளியான விசித்திரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
இவ்வாறு தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வந்த மது ஷாலினி, தற்போது ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர் தன்னுடன் பஞ்சராக்ஷரம் படத்தில் நடித்த கோகுல் ஆனந்த் என்கிற நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். ஐதராபாத்தில் நடந்த இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நேற்று தனது திருமண புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் மது ஷாலினி. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... ஆடையின்றி காஃபியில் குளியல் போட்ட பிகில் பட நடிகை... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்