ஆடையின்றி காஃபியில் குளியல் போட்ட பிகில் பட நடிகை... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Amritha Aiyer : பிகில் படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக இருப்பார் நடிகர் விஜய், அந்த அணியில் தென்றல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்ரிதா ஐயர்.
அட்லீ இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசான படம் பிகில். இதில் நடிகர் விஜய் கால்பந்தாட்ட வீரராகவும், பின்னர் பயிற்சியாளராகவும் நடித்திருப்பார். அவர் ஒரு பெண்கள் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். அந்த அணியில் தென்றல் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அம்ரிதா ஐயர்.
இப்படத்துக்கு பின்னர் கவினுடன் ஜோடி சேர்ந்து லிஃப்ட் படத்தில் நடித்த அம்ரிதா, தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோயினாக வலம் வருகிறார். தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா நடிப்பில் தயாராகி வரும் காஃபி வித் காதல் என்கிற நகைச்சுவை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அம்ரிதா.
நடிகை அம்ரிதாவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 20 லட்சம் பாலோவர்களை கொண்டிருக்கும் அம்ரிதா அதில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு லைக்சுகளை அள்ளுவார்.
அந்த வகையில் சமீபத்தில் குளிக்கும் போது எடுத்த போட்டோவை போட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார் அம்ரிதா. அதுவும் காஃபியில் குளியல் போடுவதாக அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் தான் அது புரமோஷனுக்காக அவர் பதிவிட்ட புகைப்படம் என தெரியவந்தது.
இதையும் படியுங்கள்... நல்லா இருக்குயா உங்க சமூக அக்கறை..! வெளியான வேகத்தில் ஜெயிலர் பட போஸ்டரை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்