MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சல்மானுடன் இணையும் அட்லீ.. மெகா ஹிட் தமிழ் நடிகரிடம் நடந்த பேச்சு வார்த்தை - ஓகே சொல்லிட்டாரா?

சல்மானுடன் இணையும் அட்லீ.. மெகா ஹிட் தமிழ் நடிகரிடம் நடந்த பேச்சு வார்த்தை - ஓகே சொல்லிட்டாரா?

Atlee Kumar : தமிழ் சினிமாவை பொருத்தவரை Flop படங்களே கொடுக்காத இயக்குனர்களின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார் பிரபல இயக்குனர் அட்லீ குமார்.

3 Min read
Author : Ansgar R
Published : Sep 21 2024, 06:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Raja Rani Movie

Raja Rani Movie

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் அட்லீ பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "எந்திரன்" திரைப்படத்தில், இயக்குனர் அட்லீ உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் அவரிடம் உதவி இயக்குனராக அவர் பணியேற்றி வந்தார்.

இந்த சூழலில் தான் கடந்த 2013ம் ஆண்டு பிரபல நடிகர் ஆர்யா மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "ராஜா ராணி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை இயக்குனராக அவர் தொடங்கினார். விமர்சன ரீதியாக சில சலசலப்புகளை சந்தித்தாலும், வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே தமிழ் சினிமாவின் விரும்பப்படும் இயக்குனராக அட்லீ மாறினார் என்றால் அது மிகையல்ல.

லிரிக்ஸ்.. டியூன்.. வாய்ஸ்.. "டாப் ஸ்டாருக்காக" அப்போவே சூப்பர் சம்பவம் செய்த இசைஞானி - எந்த பாடலில் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Theri Movie

Theri Movie

அதைத்தொடர்ந்து "என் அண்ணனுக்கு நான் தாண்டா செய்வேன்" என்று கூறி தளபதி விஜய் வைத்து தெறி,  மெர்சல் மற்றும் பிகில் என்று தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்து பிளாக்பஸ்டர் இயக்குனராக அட்லீ மாறினார். தளபதி விஜயை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த வெகு சில இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். குறிப்பாக அட்லீ இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியன் தளபதி விஜயின் "மெர்சல்" திரைப்படம் துவக்கத்தில் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. 

குறிப்பாக அந்த படத்தில் வரும் ஆளப்போறன் தமிழன் என்ற பாடல் அப்போது பெரிய அளவில் ஹிட்டானது. அதுமட்டுமல்ல, விஜயின் அரசியல் என்ட்ரி குறித்த அறிவித்த படங்களில் அதுவும் ஒன்று. விஜயின் ரசிகர்கள் மத்தியில் மெர்சல் படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

34
Jawan Movie

Jawan Movie

2019ம் ஆண்டு தளபதி விஜயின் பிகில் படம் வெளியான பிறகு பெரிய இடைவெளிவிட்டு இயக்குனர் அட்லீ, பாலிவுட் உலகின் செல்ல பிள்ளையாக மாறினார். ஹிந்தி திரைப்பட உலகின் பாட்சாவாக விளங்கும் ஷாருக்கானை வைத்து "ஜவான்" என்ற மெகாஹிட படத்தை உருவாக்கினார் அட்லீ. அது நயன்தாராவின் முதல் ஹிந்தி படமாக மாறியதும் குறிப்பிடத்தக்கது. உலக அளவில் ஜவான் திரைப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் வசூல் செய்து சூப்பர் டூப்பர் ஹிட்டாக மாறியது. 

இந்த நிலையில் தான் பாலிவுட் பிரபலங்கள் பலருடைய பார்வை அட்லீ பக்கம் திரும்பியது. கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட் உலகிலும் டாப் இயக்குநரானார் அட்லீ குமார். அதுமட்டுமல்ல அண்மையில் நடந்து முடிந்த அம்பானி வீட்டு கல்யாணத்தில், ஒரு குறிப்பிட்ட நிகழ்வை இயக்கி மாபெரும் புள்ளியாக மாறினார் இயக்குனர் அட்லீ. அவரது மனைவி பிரியாவோடு அவர் அந்த ஆனந்த் அம்பானி திருமணத்தில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

44
Kamalhaasan and atlee

Kamalhaasan and atlee

ஏற்கனவே ஐந்து வெற்றி திரைப்படங்களை இயக்கி மெகா ஹிட் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லீ குமார், தற்பொழுது தனது ஆறாவது திரைப்பட பணிகளை விரைவில் துவங்க உள்ளார். மேலும் இந்த திரைப்படமும் ஒரு ஹிந்தி திரைப்படமாக அமைய உள்ளது. பாலிவுட் உலகின் மிக மூத்த நடிகரான சல்மான் கானை வைத்து தான், தனது ஆறாவது திரைப்படத்தை அட்லீ இயக்க உள்ளார் என்கின்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி வந்தது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கான பணிகளும் விரைவில் துவங்க உள்ளது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்பொழுது கடந்த சில நாட்களாக ஒரு தகவல் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் சல்மான் கானுக்கு இணையான ஒரு கதாபாத்திரத்தில், அட்லீயின் ஆறாவது திரைப்படத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடிக்க உள்ளதாகவும். அதற்கான பேச்சுவார்த்தை அவரோடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் இந்த திரைப்படத்தில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ப்ரோஸ்தெடிக் மேக்கப் முதல் DSS Tech வரை - இந்திய சினிமாவில் புரட்சி செய்த "ஆண்டவரின்" ஐந்து படங்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
கமல்ஹாசன்
சல்மான் கான்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved