திருமணத்திற்கு முன் நடந்த நலங்கு வைக்கும் வைபவ புகைப்படத்தை பகிர்ந்த அதியா ஷெட்டி!
பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி திருமணத்திற்கு முன்னதாக நடந்த நலங்கு வைபவ நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சுனில் ஷெட்டி
மகாராஷ்டிரா மாநிலம் கண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் வைத்து இவர்களது திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது.
மாமனார் பொறுப்பை விட அப்பா பொறுப்பை நான் நன்றாகவே நிறைவேற்றுகிறேன்: சுனில் ஷெட்டி!
மனா ஷெட்டி
அதியா ஷெட்டியின் அம்மா மனா ஷெட்டி மகளுக்கு பூ வைத்து ஆசிர்வாதம் செய்துள்ளார்.
அதியா ஷெட்டி
இந்த திருமண நிகழ்ச்சிக்கு இஷான் கிஷான், வருண் ஆரோன், சினிமா பிரபலங்கள் டயானா பென்டி, அன்ஷுலா கபூர், கிருஷ்ணா ஷெராஃப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எப்படி நேசிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறேன்: திருமணத்திற்கு பிறகு கேஎல் ராகுல் முதல் டுவீட்!
அதியா ஷெட்டி நலங்கு வைபவம்
இந்த திருமண நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஹல்டி எனப்படும் மஞ்சள் பூசும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கேஎல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி இருவரும் மஞ்சள் பூசி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், அதியா ஷெட்டி திருமணத்திற்கு முன்னதாக நடந்த நலங்கு வைக்கும் வைபவத்தின் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.